இந்நிலையில் வழக்கமான இடியாப்பம் போல் இல்லாமல், கோதுமை மாவில் இடியாப்பம் செய்து சாப்பிடுங்க. இதை சமைக்க வெறும் 20 நிமிஷம் போதும்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர்
தேங்காய் துருவல்
செய்முறை : ஒரு இட்லி பாத்திரத்தை சூடுபடுத்த வேண்டும். அதில் தண்ணீர் ஊற்ற வேண்டும். இட்லி தட்டில், கோதுமை மாவை போட்டு வேக வைக்க வேண்டும். சிறிது நேரத்தில் இட்லி தட்டில் இருக்கும் கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் போடவும். இந்நிலையில் இது கட்டியாக இருக்கும் என்பதால் நன்றாக மாவை உடைத்து கொண்டு அதை சலிக்க வேண்டும். தொடர்ந்து இதில் நன்றாக தண்ணீர் சேர்த்து பிசைய வேண்டும். கோதுமை மாவை விட மிரதுவாக பிசைய வேண்டும். இந்நிலையில் முருக்கு பிழியும் அச்சில். எண்ணெய் தடவி மாவை சேர்த்து பிழியவும் . தொடர்ந்து அதை இட்லி பாத்திரத்தில் வைத்து, மேலே தேங்காய் துருவல் தூவி வேக வைத்து எடுக்கவும்.