ஸ்வீட் சாப்பிட ஆசையாக இருக்கா? அப்போ கோதுமை வைத்து சுவையான கோதுமை ரவை கேசரி எப்படி செய்வது என்று பார்ப்போம். ஹோம் குக்கிங் யூடியூப் பக்கத்தில் சுவையான கோதுமை ரவை கேசரி செய்வது பற்றி பார்ப்போம்.
பிரஷர் குக்கரில் நெய் மற்றும் கோதுமை ரவை சேர்க்கவும். மிதமான தீயில் 5 நிமிடங்கள் வறுக்கவும். தண்ணீர் சேர்த்து 3 விசில் வரும் வரை வேகவிடவும். வெந்ததும் அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி தனியாக வைக்கவும்.
ஒரு சாஸ் பாத்திரத்தில் பொடித்த வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்க்கவும். வெல்லம் முழுவதுமாக கரையும் வரை கொதிக்க வைக்கவும். ஒரு பாத்திரத்தில் நெய் சேர்க்கவும். முந்திரி, பாதாம், பிஸ்தா மற்றும் திராட்சை சேர்த்து வறுக்கவும். அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி தனியாக வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் நெய் சேர்க்கவும். அடுத்து நெய்யில், சமைத்த கோதுமையை ரவையை சேர்த்து அதில் வெல்ல பாகை வடிகட்டி ஒன்றாக கலக்கவும். நெய் சேர்த்து நன்கு கலக்கவும். ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும்.
வறுத்த முந்திரி, பாதாம், பிஸ்தா மற்றும் திராட்சை எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும். அவ்வளவு தான் சுவையான கோதுமை ரவா கேசரி சூடாக ரெடி.