உங்கள் காலை உணவை சிம்பிள் மற்றும் ஹெல்தியாக மாற்ற கோதுமை ரவை புட்டு செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
கோதுமை ரவை – 2 கப்
நெய் – தேவையான அளவு
தேங்காய் துருவல் – அரை கப்
முந்திரி – தேவையான அளவு
உப்பு – சிறிதளவு
செய்முறை
முதலில் கோதுமை ரவையை மிதமான சூட்டில் வறுத்து எடுக்க வேண்டும். அதற்கு அடுப்பில் கடாய் வைத்து சிறிது நெய் ஊற்றி கோதுமை ரவையை வறுத்து எடுக்க வேண்டும். அடுத்து பாத்திரத்தில் 1 கப் நீர் ஊற்றி கொதிக்க விட்டு எடுக்கவும். இதில் சிறிதளவு உப்பு சேர்த்து கொள்ளலாம். இப்போது மற்றொரு பாத்திரம் எடுத்து வறுத்த ரவையைப் போட்டு, முந்திரியை இரண்டாக உடைத்து சேர்த்து வெதுவெதுப்பான நீரை ஊற்றி பிசையவும். ரவை உதிர் உதிராய் இருக்க வேண்டும்.
அடுத்ததாக, புட்டுக் குழாய் எடுத்து அதில் உள்ளே நெய் தடவி சிறிதளவு தேங்காய் துருவலை சேர்க்கவும். பின்னர் குழாய்க்கு ஏற்றவாறு கோதுமை ரவை கலவையை நிரப்பவும். மீண்டும் தேங்காய் சேர்த்து குழாயை மூடவும். புட்டு குழாய் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து இந்த குழாயையும் வைத்து வேக விடவும். 15 நிமிடம் நன்கு வேக வைத்து எடுத்தால் கோதுமை ரவை புட்டு ரெடி. தேங்காய் சட்னியுடன் சுடச் சுட பரிமாறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“