சுவையான கோதுமை ரோல் சிப்ஸ் செய்வது பற்றி பார்ப்போம்.
கோதுமை மாவு – 2 கப்
ஓமம், மஞ்சள்த் தூள் – தலா ½ டீஸ்பூன்
நீர், ஆம்சூர் பொடி, கரம் மசாலா பொடி, மிளகாய்த் தூள் – தலா 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை
ஒரு பாத்திரம் எடுத்து அதில் கோதுமை மாவு, உப்பு, ஓமம், மஞ்சள் தூள், நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். சிறிது நேரம் ஊறிய பிறகு சப்பாத்தி செய்வதற்கு செய்வது போல் மாவு திரட்டி ரோல் செய்து கொள்ளவும். தேவை என்றால் காய்கறிகள் கூட சேர்க்கலாம்.
இப்போது ரோலை சுற்றி மூடி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். அதன் பின் அதன் மேல் பொரித்த சூடான கறிவேப்பிலையை தூவி, ஆம்சூர்ப் பொடி, கரம்மசாலா தூள், மிளகாய்த் தூள் தூவி பரிமாறினால் சுவையான கோதுமை ரோல் சிப்ஸ் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“