எப்படி உளுந்து மாவில் வடை சுடுவோமோ அதுபோலவே கோதுமையிலும் வடை சுட முடியும். சுவையாகவும், ஆரோக்கியமான இந்த ரெசிபியை தவறாமல் வீட்டில் செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 1 கப்
ரவை – ½ கப்
பச்சரிசி மாவு – 3 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தயிர் – ½ கப்
தண்ணீர் – 1 ½ கப்
பச்சை மிளகாய் – 2
வெங்காயம் – 1
இஞ்சித் துண்டுகல்– 1 டீஸ்பூன்
மிளகு பொடித்தது – 1 டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி, கருவேப்பிலை – சிறிதளவு
சீரகம் – ½ டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – தேவையான அளவு
சோடா உப்பு – சிறிதளவு.
செய்முறை:
கோதுமை மாவு வடை செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ரவை, தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் பச்சரிசி மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். அப்போது தான் வடை மொறுமொறு என்று வரும். இவற்றுடன் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாக கட்டிகள் இல்லாமல் கலந்து வைத்துக் கொள்ளவும்.
இந்த கலவையுடன் நறுக்கிய பச்சை மிளகாய் , வெங்காய சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இஞ்சி, மிளகை இடித்து சேருங்கள். அரை சீரகம் தாளித்து சேருங்கள். பின்னர் இவற்றுடன் நறுக்கிய கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளுங்கள். மாவில் இருக்கும் வாயுவை எடுக்க கொஞ்சம் பெருங்காயத் தூள் சேர்த்துக் கொள்வது நல்லது.
பின்னர் பேக்கிங் சோடா எனப்படும் சமையல் சோடாவை சேர்த்து கொள்ள வேண்டும். எல்லா பொருட்களையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்கு கெட்டியாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் 10 நிமிடம் நன்கு ஊற விட்டு விடுங்கள்.
5 நிமிடம் நன்கு ஊறிய பிறகு மாவை ஒரு முறை நன்கு கலந்துவிட்டு கொள்ளுங்கள். அதன் பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் வடை சுட்டு எடுக்கும் அளவிற்கு எண்ணெய் ஊற்றி நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு கொதித்ததும் ஒரு கரண்டி மாவை எடுத்து மெதுவாக எண்ணெயில் ஊற்றுங்கள். அது அப்படியே பொங்கி மேலே எழும்பி வந்து மிதக்கும். பிறகு இருபுறமும் சிவக்க எல்லா வடைகளையும் இதே போல சுட்டு எடுத்துக்கொள்ளுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.