scorecardresearch

உப்பு அல்லது சர்க்கரை : எது ரொம்ப கெடுதல் ? 

இந்நிலையில் இயற்கையாக பழங்கள் மற்றும் உணவு பொருட்களில் இருக்கும் சர்க்கரை உடலை அந்த அளவுக்கு பாதிக்காது.

உப்பு அல்லது சர்க்கரை
உப்பு அல்லது சர்க்கரை

சர்க்கரை அல்லது உப்பு எது அதிக சிக்கலை ஏற்படுத்தும் என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழும். இந்நிலையில் இயற்கையாக பழங்கள் மற்றும் உணவு பொருட்களில் இருக்கும் சர்க்கரை உடலை அந்த அளவுக்கு பாதிக்காது. ஆனால் கூல் டிரிங்ஸ், பழச் சாறுகள், பிஸ்கட், கேக்  உள்ளிட்ட வைகளில் இருக்கும் சர்க்கரை உடலை அதிக அளவில் பாதிக்கும்.

2014ம் ஆண்டு நடைபெற்ற ஆய்வு ஒன்றில் 17 முதல் 21 % கலோரிகளை சர்க்கரையிலிருந்து எடுத்துக்கொள்ளும் நபர்களுக்கு இதய ரத்த குழாய் சார்பான நோய்கள் ஏற்படும் சாத்தியங்கள் அதிகம்  என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நாம் எடுத்துக்கொள்ளும் சர்க்கரை நேரடியாக இதயத்தை பாதிக்கவில்லை. இந்நிலையில் அதிக சர்க்கரை நமது கல்லீரலை பாதிக்கும். மேலும் கொழுப்பாக மாறி, பேட்டி லிவரை உருவாக்கும்.

அதிக சர்க்கரை உடல் எடையை அதிகரிக்கும். அதிக சர்க்கரை சாப்பிட்டால், அது மோசமான வீக்கத்தை ஏற்படுத்தும். இது மீண்டும் இதயத்தைதான் பாதிக்கும்.

இந்நிலையில் உப்பை பொருத்தவரை, சோடியத்தின் அளவு ஒரு நாளைக்கு 5 கிராமிக்கு கிழேதான் பயன்படுத்த வேண்டும். உப்பில் இருந்து மட்டும் சோடியம் நமது உடலுக்கு கிடைக்கவில்லை. பிரட், பீட்சா, சான்விஜ், சீஸ் ஆகியவற்றில் சோடியம் இருக்கிறது. இந்நிலையில் நாம் அதிகமாக உப்பு எடுத்துக்கொள்ளும்போது, சோடியத்தின் அளவும் அதிகமாகும், இதனால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். மேலும் வயிறு உப்புதல் ஏற்படும். நமது முட்டிகளில் வீக்கம் கூட ஏற்படலாம்.

இந்நிலையில் சர்க்கரை அல்லது உப்பு இரண்டையும் அளவாக எடுத்துகொள்ள வேண்டும். ஆனால் சுகர் நோயளிகள் சர்க்கரையை முழுவதுமாக கைவிடுவது நல்லது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

R

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Which is so bad for health salt or sugar