40,000 அரிசி வகைகளில் பெஸ்ட்... சுகர் பேஷன்ட்ஸ் கோதுமைக்கு பதிலாக இரவில் இதை சாப்பிடலாம்!

அரிசி எவ்வளவு நீளமாக இருக்கிறதோ அதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருக்கும். சுகர் ஏறும் தன்மை குறைவாக இருக்கும் என்று மருத்துவர் கூறியுள்ளார்.

அரிசி எவ்வளவு நீளமாக இருக்கிறதோ அதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருக்கும். சுகர் ஏறும் தன்மை குறைவாக இருக்கும் என்று மருத்துவர் கூறியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
diabetes, rice ghee

உலகில் மொத்தம் 40,000 அரிசி வகைகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் 6,000 வகைகள் உள்ளது. இதில் எந்த அரிசி சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகம் கூடாது என்பது பற்றி மருத்துவர் அருண்கார்த்திக் கூறியுள்ளார். அவர் கூறுகையில், மேலும் அந்த வகையான அரிசியை எப்படி தேர்ந்தெடுப்பது என்றும் கூறியுள்ளார். 1. அரிசியின் நீளம். அரிசி எவ்வளவு நீளமாக இருக்கிறதே அதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருக்கும். சுகர் ஏறும் தன்மை குறைவாக இருக்கும். 

Advertisment

எ.கா. பாஸ்மதி அரிசி நீளமாக இருக்கும் அதனால் அதில்  சுகர் ஏறும் தன்மை சற்று குறைவாக இருக்கும். இந்தியாவில் பரவலாக உள்ள பொன்னி அரிசி, ஆந்திராவில் உள்ள சோனா மசூரி போன்ற அரிசி மீடியம் நீளம் உள்ள அரிசி. இதில் சுகர் ஏறும் தன்மை அதிகம் உள்ளது. 2. நிறம்.  அரிசி எவ்வளவு வெள்ளையாக இருக்கிறதோ அவ்வளவு சுகர் ஏறும். பொன்னி அரிசி வெள்ளையாக பொங்கி வருகிறது என்று நினைப்போம். ஆனால் அதில் சுகர் அதிகம் ஏறும். ஆனால் இதுவே மஞ்சள் நிறத்தில் உள்ள அரிசியில் சற்று சுகர் கம்மியாக ஏறும். 

ரேஷன் அரிசி மஞ்சளாக இருக்கும். வெள்ளை நிறம் கம்மியாக உள்ளது அதனால் அது சற்று குறைவாக சுகர் ஏறும். ப்ரொவின் நிறத்தில் இருக்கும் மாப்பிள்ளை சம்பா சிறந்தது. அதை விட நிறம் கம்மியாக உள்ள கருப்பு கவுனி அரிசி எடுத்துக் கொள்வது நல்லது. சுகர் குறைவாக ஏறும் என்று கூறியுள்ளார்.  

Advertisment
Advertisements
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: