கொய்யா பழத்திலேயே வெள்ளை மற்றும் பிங் நிற கொய்யா இருப்பதால் எந்த கொய்யா சிறந்தது என்ற சந்தேகம் நமக்கு எழலாம்.
ஒரு பழம் இவ்ளோ நன்மையா?
கொய்யா பழங்கள் ரத்த சர்க்கரையை குறைக்கும். இதய ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும். மாதவிடாய் காலங்களில் வலியை குறைக்கும். ஜீரணத்திற்கு உதவும். உடல் பருமன் குறைக்க உதவும். புற்றுநோய்க்கு எதிராக செயல்படும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சருமத்தை பொலிவாக்கும். மேலும் இதில் இரும்பு சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இருக்கிறது.
பிங் நிற கொய்யாவில் அதிக நீர்சத்து இருக்கிறது. குறைந்த சர்க்கரை அளவு வைட்டமின் சி இருக்கிறது. விதைகள் இருப்பதில்லை. இதுவே வெள்ளை நிற கொய்யாவில் அதிக சுகர் அளவு, வைட்டமின் சி மற்றும் விதைகள் இருக்கிறது. இதில் அதிக ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது.
மேலும் பிங்க் நிற கொய்யாவில் அதிக வைட்டமின் சி மற்றும் ஏ, மேலும் இதில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 பாலி சாச்சுரேட்டட் கொழுப்பு சத்துகள் இருக்கிறது. மேலும் இதில் இருக்கும் அதிக நார்சத்து, சர்க்கரை நோயாளிகளுக்கு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.