40- 45 வயதுக்கு மேல் ஆண்களுக்கு சிறுநீரகப் பாதையில் எரிச்சல்; சின்ன வெங்காயம் மூலமாக தீர்வு: டாக்டர் நித்யா

40- 45 வயதுக்கு மேல் ஆண்களுக்கு சிறுநீரகப் பாதையில் எரிச்சல் உண்டாகலாம். இதற்கு என்ன காரணம் என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் டாக்டர் நித்யா கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
nithya

சிறுநீரகப் பாதையில் எரிச்சல் - டாக்டர் நித்யா டிப்ஸ்

உடல் பிரச்னைகளில் மிகவும் முக்கியமானவற்றில் சிறுநீரகக் கோளாறும் ஒன்றாகும். அதிலும் 40 முதல் 45 வயதுக்கு மேல் ஆண்களுக்கு சிறுநீரகப் பாதையில் எரிச்சல் ஏற்படும். இதற்கு காரணம் ஆண்களுக்கு புராஸ்டேட் சுரப்பி பெரிதாகி விடும்.  மேலும் இந்த பிரச்சனையை விளக்கி மருத்துவர் நித்யா தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

Advertisment

அதாவது புராஸ்டேட் எனும் சுரப்பி பெரிதாகி சிறுநீர்ப்பையின் கழுத்துப் பகுதியை அழுத்துவதால் சிறுநீர் சொட்டு சொட்டாக வெளியேறும் பிரச்னை ஏற்படும். புராஸ்டேட் சுரப்பி வீக்கம் அடைந்தாலோ அல்லது அப்பகுதியில் கட்டிகள் ஏதேனும் இருந்தாலோ இந்தப் பிரச்னை ஏற்படும். 

புராஸ்டேட் சுரப்பி பெரிதானால் இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், சொட்டுசொட்டாக சிறுநீர் வெளியேறுதல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு சல்பர் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். குறிப்பாக சின்ன வெங்காயம்,  பூண்டு போன்றவை.

டிப்ஸ் 1: தினமும் 5 சின்ன வெங்காயம், தயிர், மிளகு தூள் சேர்த்து கலந்து உணவுக்கு முன் காலை அல்லது மதியம் ஏதாவது ஒரு வேளை எடுக்கும்போது நல்ல முன்னேற்றம் இருக்கும்.

Advertisment
Advertisements

ஆண்களின் விந்தணுக்கள் குறைய என்ன காரணம் ? | Why Semen Analysis Is Important | Dr.Nithya |Health tips

டிப்ஸ் 2: அதேபோல தான் மஞ்சள் குடிநீர். சுத்தமான மஞ்சள் பொட்டி அல்லது மஞ்சளை இடித்து 1 கிளாஸ் தண்ணீரில் சேர்த்து அதனுடன் அரை ஸ்பூன் சீரகம் போட்டு முக்கால் கிளாஸ் வரும் வரை கொதிக்கவிட்டு  குடிக்கலாம். இதனால் தேவையற்ற கழிவுகள் வெளியேறும்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Onion Tips to keep your kidneys healthy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: