scorecardresearch

பட்டை ஏன் முக்கியம்? ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் உள்ளவங்க இதை கண்டிப்பா கவனிக்கணும்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எலுமிச்சை தண்ணீருடன், பட்டை பொடியை சேர்த்து சாப்பிடவும். கர்ப்பிணி பெண்கள், குடல் தொடர்பான நோய் உள்ளவர்கள் மற்றும் 18 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகள் இதை சாப்பிடக் கூடாது.

பட்டை ஏன் முக்கியம்? ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் உள்ளவங்க இதை கண்டிப்பா கவனிக்கணும்

பட்டையில் இருக்கும் நன்மைகள் முக்கிய நோய்களை கட்டுப்படுத்த கூடியவை.

பட்டை என்பது இந்தியா மற்றும் இலங்கையில்  பயிரிடப்படுகிறது. இந்நிலையில் பட்டையில் இருக்கும் சத்துக்களை பற்றி நாம் அறிய வேண்டும்.

பட்டையில் 11 % தண்ணீர், 81 சதவிகிதம் கார்போஹைட்ரேட்,4 % புரோட்டீன், 1 % கொழுப்பு  இருக்கிறது. மேலும் இதில் கால்சியம், இரும்பு சத்து, வைட்டமின் கே, ரெசின்ஸ், இருக்கிறது. இதில் இருக்கும் இந்த சத்துகள் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், வாய் தொடர்பான ஆரோக்கியம் ஆகியவற்றை கட்டுப்படுத்தவும், காப்பாற்றவும் உதவுகிறது.

ஆனால் இதில் சர்க்கரை நோய் மற்றும் மெட்டபாலிக் குறைபாடுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் என்பதற்கு ஆழ்ந்த அறிவியல் ஆராய்ச்சிகள் இருக்கிறது.

இதில் இருக்கும் பாலிபினால்ஸ் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட் நமது செல்களில் உள்ள நச்சுக்களை சுத்தம் செய்கிறது.  மேலும் சாப்பிட்ட பின்பு, குளுக்கோஸை உடல் மெதுவாக உள்வாங்கிக்கொள்ள உதவுகிறது.

எப்படி சாப்பிட வேண்டும்?

பட்டையை நன்றாக பொடி செய்து கொண்டு ஒரு 3 கிராம் அல்லது அரை டேபிள் ஸ்பூனை நாம் அப்படியே சாப்பிடலாம். அத்துடன் 150 எம்.எல் தண்ணீருடன், பட்டை பொடியை கலந்து சாப்பிடலாம். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் இதை, எலுமிச்சை சாறுடன், தேன் மற்றும் பட்டை பொடியை சேர்த்து குடிக்கலாம்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எலுமிச்சை தண்ணீருடன், பட்டை பொடியை சேர்த்து சாப்பிடவும். கர்ப்பிணி பெண்கள், குடல் தொடர்பான நோய் உள்ளவர்கள் மற்றும் 18 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகள் இதை சாப்பிடக் கூடாது.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Why cinnamon does more than control blood sugar