scorecardresearch

உடல் எடையை வேகமாக குறைக்க பெருஞ்சீரகம் உதவுமா?

காயவைத்த பெருஞ்சீரகத்தில் கலோரிகள் குறைவாக உள்ளது. நார்சத்து அதிகமாக உள்ளது. இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட் அளவு வீக்கத்தை குறைக்கிறது.

பெருஞ்சீரகம்

காயவைத்த பெருஞ்சீரகத்தில் கலோரிகள் குறைவாக உள்ளது. நார்சத்து அதிகமாக உள்ளது. இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட் அளவு வீக்கத்தை குறைக்கிறது.

இந்நிலையில் இதய ஆரோக்கியம் மற்றும் உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைத்தால் பெருஞ்சீரகம் நல்ல தேர்வாக இருக்கும். இதில் வைட்டமின் சி, இ மற்றும் கே மற்றும் கால்சியம், மெக்னிஷியம்,  சிங்க், பொட்டாஷியம்,  செலினியம், இரும்பு சத்து இருக்கிறது.

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது

பெருஞ்சீரகத்தில், உள்ள நடைட்ரேட்ஸ் இதய குழாய்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. பெருஞ்சீரகத்தை நாம் மென்று சாப்பிடுவதால், அதில் இருக்கும் நடைட்ரேட், இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களை விரிவாக்கும். இதய சதைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதில் இருக்கும் நார்சத்து, கொலஸ்ட்ராலை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும். இதனால் கொழுப்பு சத்து ரத்த குழாய்களில் படியாது. இதில் இருக்கும் பொட்டாஷியம் அளவு, ரத்த அழுத்தத்தை சீராக வைக்கும்.

உடல் எடை குறையும்

இதில் இருக்கும் நார்த்து, ஜீரணத்தை மெதுவாக்கி, ரத்த சர்க்கரை அதிகாரிக்காது. பெருஞ்சீரகத்தை சாப்பிடுவதால், அதிக பசி எடுக்காது. இரண்டு வேளை சாப்பாட்டுக்கு இடையே நாம் பெருஞ்சீரகம் சேர்த்த டீ குடித்தால் அதிகம் பசிக்காது. இந்நிலையில் பெருஞ்சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டல், உடல் எடை குறைக்க உதவும்.

இதில் இருக்கும் கரையக்கூடிய நார்சத்து , ரத்த சர்க்கரையை அதிகரிக்காமல் தடுக்கிறது. இதனால் சீரான ரத்த சர்க்கரை அளவு இருக்கும். இதில் இருக்கும் பிட்டா கரோடினின் மற்றும் மற்ற ஆண்டி ஆக்ஸிடண்ட் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும்.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Why fennel seeds work on weight loss keep your heart healthy and the gut happy