scorecardresearch

காலை வெறும் வயிற்றில் சில துண்டுகள் பப்பாளி : ஏன் ரொம்ப முக்கியம் தெரியுமா?

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பப்பாளி மிகவும் நல்ல தேர்வாக இருக்கும், இதன் கிளைசிமிக் இண்டக்ஸ் அதிகமாக இல்லை மேலும் இதில் அதிக நார்சத்து இருப்பதால், ரத்ததில் உள்ள சர்க்கரையை உடல் அதிகமாக எடுத்துக்கொள்ளாது இதனால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

பப்பாளி

சில நேரங்களில் நாம் உணவை தவிர்த்துவிட்டு,நோன்பு இருப்போம். இந்நிலையில் இந்த காலங்களில் காலையில் எந்த உணவை எடுத்துக்கொள்ளலாம் என்ற கேள்வி எழும்.

இந்நிலையில், சிறந்த காலை உணவாக பப்பாளி இருக்கும். இரவு முழுக்க கிட்டதட்ட 12 மணி நேரம் இடைவேளைவிட்டு காலையில் உங்களை இயக்குகிறீர்கள். இதில் ’பாப்பின்’ என்ற என்சமை இருக்கிறது. இது உணவை வேகமாக உடைக்கும். மேலும் புரதசத்தை நமது உடல் இந்த வேளையில் உடைத்திருக்கும். அதை சீராக்குகிறது.

பப்பாளியில் நார்சத்து இருக்கிறது. மேலும் இதில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, போலேட், பொட்டஷியம் இருக்கிறது. இதில் குறைந்த கலோரிகள் இருக்கிறது. விரதம் இருக்கும்போது, இதை சாப்பிட்டல், இதில் உள்ள நார்சத்து அதிக உணவை சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை  குறைக்கும். இதில் அதிக தண்ணீர் இருப்பதால், சீரணிக்கும் மண்டலத்தின் பாதையை செயல்படுத்தும். இதனால் மீண்டும் நம்மை வரட்சியடைய செல்லாமல் இருக்க உதவும்.

அஜீரணம், வயிற்று உப்புதல் போன்ற ஜீரணம் தொடர்பான சிக்கலை சரி செய்ய காலை வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிட வேண்டும். இதில் என்சைமான, சைமோபாபின் விக்கத்தை குணப்படுத்தும். இதில் இருக்கும் போலிக் ஆசிட் மற்றும் இரும்பு சத்து ரத்த சோகை மற்றும் சோர்வு ஏற்படாமல் தடுக்கும்.  

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பப்பாளி மிகவும் நல்ல தேர்வாக இருக்கும், இதன் கிளைசிமிக் இண்டக்ஸ் அதிகமாக இல்லை மேலும் இதில் அதிக நார்சத்து இருப்பதால், ரத்ததில் உள்ள சர்க்கரையை உடல் அதிகமாக எடுத்துக்கொள்ளாது இதனால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

ஒரு ஆய்வுப்படி, சர்க்கரை நோயாளிகள் 6 வாரங்களுக்கு தொடர்ந்து பப்பாளி சாப்பிடும்போது, அவர்களது சர்க்கரை அளவு குறைந்துள்ளது என்பதை கண்டறிந்துள்ளனர்.

ரத்தத்தில் ஹோமோசிஸ்டீன் என்பது அதிகரித்தால், நமது ரத்த கூழாய்கள் பாதிக்கப்படும். இதனால் இதய பாதிப்பு ஏற்படும், பப்பாளியில் உள்ள போலேட் இந்த அளவை குறைக்க உதவுகிறது.  

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Why papaya is the best bet to break a fast and keep up energy levels

Best of Express