நம் தமிழ் பாரம்பரியத்தில் ஒவ்வொரு உணவையும் எப்படி சாப்பிட வேண்டும் என்று பழக்கம் உள்ளது.
காலை உணவினை 6:45 முதல் 7:30க்குள் எடுத்துக் கொள்ள வேண்டும். மதிய உணவு மதியம் 1 மணிக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும். இரவு உணவு 6:30 மணி முதல் 7:00 மணிக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் மைதா செயற்கை இனிப்பூட்டிகள், செயற்கை நிறமூட்டிகள் போன்றவற்றை முழுமையாக தவிர்க்க வேண்டும். காய்கறிகளை நன்கு கழுவி சுத்தம் செய்து சமைத்து சாப்பிட வேண்டும்.
பீர்க்கங்காய், சொரைக்காய் போன்ற நீர்ச்சத்து உள்ள காய்கறிகளை கூட்டு செய்து தான் சாப்பிட வேண்டும். அதேபோ காய்கறிகளையும் புளியில் ஊறவைத்து அல்லது வேகவைத்து சாப்பிட வேண்டும்.
பெரும்பாலான் வெளிநாட்டு உணவுகளில் சீஸ் சேர்ப்பதில் உள்ள நன்மைகள் நம்மூர் தயிர்பச்சடியில் கிடைக்கிறது. அதில் போடக்கூடிய வெங்காயம் சிறிது உப்பு என அனைத்தும் உடலுக்கு சீர்ந்த பலனை கொடுக்க கூடியதாகும்.
புளியில் காய்கறிகளை ஊற வைத்தல் அல்லது அதோடு சேர்த்து வேக வைக்கும் போது தான் அதில் உள்ள சத்துக்கள் அப்படியே கிடைக்கும்.
காய்களை புளியில் ஊறவைத்து சமைக்கவும்! Dr. Sivaraman speech in Tamil about Healthy Food | Health Tips
புளிக் குழம்பு, ரசம், சாம்பாரில் புளி கரைசல் ஊற்றி வேக வைத்தல் உள்ளிட்ட அனைத்திலும் புளி சேர்க்க காரணம் அந்த சத்துக்கள் நமக்கு அப்படியே கிடைக்க வேண்டும் என்பதற்காக தான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“