வைட்டமின் கே-வின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இதய ரத்த கூழாய்களிடம் ஆரோக்கியத்தை கருத்தில் கொள்ளும்போது, விட்டமின் கே-வின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது.
ரத்தம் உரைந்து, ரத்த கட்டியாக மாறுவதற்கு , வைட்டமின் கே முக்கிய பங்காற்றுகிறது. உடலுக்கு ரத்த உரைதலுக்கு புரோட்டீன் தேவைப்படுகிறது.
வைட்டமின் கே, இதய ஆரோக்கியதிற்கு உதவுகிறது. இந்த வைட்டமின் குறைபாட்டால், ரத்த குழாய்களில் கால்சியம் படியத்தொடங்கும். இதுபோல வைட்டமின் கே-வில் வீக்கத்தை தடுக்கும் பண்புகள் இருக்கிறது. இதனால் ரத்த குழாய்களி கொழுப்பு படிவதை தடுக்கும்.
நமது எலும்புகள், உடையாமல் இருக்க, வைட்டமின் கே உதவுகிறது. குறிப்பாக இடுப்பு எலும்புகள் வலுவாக இருப்பதற்கு உதவுகிறது. இதுபோல பல்லில் துவாரங்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
ஒரு வளர்ந்த மனிதனுக்கு 100 முதல் 300 மைக்ரோ கிராம் வரை வைட்டமின் கே 2 தேவைப்படுகிறது. இவை பச்சை இலைகள் உள்ள காய்கறிகள், கீரை வகைகள், புரொக்கோலி ஆகியவைகளில் வைட்டகின் கே இருக்கிறது. இதுபோல முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் கே2 இருக்கிறது. மேலும் கே1 மற்றும் கே2 இரண்டும் நம் உடலுக்கு தேவை.