சமீப காலமாக குளுட்டன் இல்லாத உணவுகள் சாப்பிட வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக மருத்துவர் கார்த்திகேயன் விரிவாக பேசியுள்ளார்.
அவர் பேசிய வீடியோவில் இருந்து தொகுக்கப்பட்டவை, “ கோதுமையில் குளுட்டன் இருக்கிறது. குளுட்டன் ஒவ்வாமை ஏற்படுவதால், கோதுமையை சாப்பிடக்கூடாது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து நாம் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். நமது குடல் பகுதியில் சிறிய முட்களைப் போல வில்லை உள்ளது. நாம் சாப்பிடும் உணவில் உள்ள இரும்பு சத்து உள்ளிட்ட முக்கிய சத்துக்கள் இந்த வில்லையால் உருஞ்சப்படுகிறது. குளுட்டன் என்ற விஷயம் கோதுமையில் இருக்கும், பார்லியில் உள்ளது. இந்த குளுட்டன் சிலருக்கு ஒற்றுக்கொள்ளாது. இந்நிலையில் இப்படி ஒரு சூழல் ஏற்படும்போது, குடலில் உள்ள வில்லை, உணவில் உள்ள முக்கிய சத்துக்களை எடுத்துக்கொள்ளாது. வில்லை பகுதி சமமாக மாறிவிடும். இதை சீலியாக் நோய் என்கிறோம்.
இந்த சீலியாக் நோய் குழந்தை பருவத்திலேயே ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள் உடல் எடை அதிகரிக்காது. வயிற்று வலி ஏற்படும். நீண்ட நாட்களுக்கு ரத்த சோகைகூட ஏற்படலாம். வயிறு எப்போதும் உப்பியே இருக்கும். சில நாட்கள் மலச்சிக்கல் ஏற்படும். சில நாட்கள் வயிற்றுப்போக்கு ஏற்படும்.
மேற்கு பகுதி ஐரோப்பாவில்தான் இந்த நோய் அதிகமாக உள்ளது. இந்தியாவை பொருத்தரவை இது வட இந்தியாவில் உள்ளது. சி.எம்.சி வேல்லூரைச் சேர்ந்த பி.எஸ் ராமகிருஷ்ணா குளுட்டன் தொடர்பான ஆய்வை 2016ம் ஆண்டு வெளியிட்டுள்ளார். இந்நிலையில் சீலியாக் நோயால் ஏற்படும் குடல் பிரச்சனை இந்தியாவில் எவ்வளவு நபர்களுக்கு ஏற்படுகிறது என்பது தொடர்பாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. வட இந்தியாவில் 1.0 % பேருக்கு இந்த சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத்தொடர்ந்து வட கிழக்கு மாநிலங்களில் இது அதிகமாக ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்தியாவின் தெற்கு பகுதியை பொருத்தவரையில் 0.10 % மட்டுமே ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் ஆயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே இந்த நோய் ஏற்படுகிறது. இதனால் யாரும் பயப்பட தேவையில்லை. ஆனால் இந்த நோயை விரைவில் கண்டறிய வேண்டும். இந்நிலையில் இதனால் பாதிக்கப்பட்டால் உணவில் நாம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். சப்பாத்தி மாவில் செய்யப்பட்ட உணவு, பிஸ்கட், பிரட்டுகள், பிரட் கிரம்ஸ் பயன்படுத்தி பொறிக்கப்பட்ட மீன், சிக்கன் உள்ளிட உணவுகளை நாம் தவிர்க்க வேண்டும்.
இந்நிலையில் அனைவரும் குளுட்டன் இல்லாத உணவுகள் சாப்பிட வேண்டும் என்பதில்லை. குளுட்டன் இல்லாத கோதுமை கப்ளி கோதுமை என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் இதன் விலை கோதுமையைவிட இரு மடங்கு அதிகம். சீலியாக் நோய் இருப்பதை கண்டுபிடிக்க எண்டோஸ்கோபி செய்ய வேண்டும். அப்படி செய்தால்தான் இந்நோய் இருக்கிறதா ? என்பதை கண்டறிய முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”