Advertisment

பச்சை முட்டை சாப்பிடுவது  நல்லதா? மோசமான விளைவுகள் ஏற்படுமா?

இந்நிலையில் பச்சை முட்டை சாப்பிடுவதால், அதில் சால்மோனெல்லா பாக்ட்டீரியா உள்ளது. இது உணவை விஷமாக மாற்றும்.

author-image
WebDesk
New Update
பச்சை முட்டை சாப்பிடுவது நல்லதா?

பச்சை முட்டை சாப்பிடுவது நல்லதா?

தினமும் ஒன்று அல்லது இரண்டு முட்டை எடுத்துக்கொள்வது, புரத சத்து தேவையை பூர்த்தி செய்கிறது. இந்நிலையில் நாம் அவித்த முட்டையைதான் எப்போதும் தேர்வு செய்வோம். ஆனால் பச்சை முட்டை சாப்பிடுவதில் நன்மை இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisment

குறிப்பாக வெள்ளை கருவை மட்டும் குடிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக ஊட்டசத்து நிபுணர்கள் கூறுகையில், “ முட்டையின் வெள்ளை கருவில் புரத சத்து அதிகம் இருக்கிறது. அதுபோலவே மஞ்சள் கருவில் புரத சத்துடன் நல்ல கொழுப்பு சத்து உள்ளது. பாடிபில்டிங் செய்யும் நபர்கள் மத்தியில் இந்த பச்சை முட்டை குடிக்கும் வழக்கம் அதிகரித்துள்ளது. ஆனால் இப்படி குடிப்பதால், சால்மோனெல்லா  பாக்டீரியா நம்மை தாக்கும்.  நமது குடல் வழியை பாதிக்கும் அபாயம் உள்ளது.

இதுபோல பச்சை முட்டையில் அவிடின் ( avidin) என்ற புரத சத்து உள்ளது, பையோட்டீன் மற்றும் வைட்டமின் பி-யை உடல் ஏற்றுகொள்ளாமால் செய்துவிடும் இதனால் வேறு குறைபாடுகள் ஏற்படலாம். இதை மருத்துவர்கள் வழக்கில் ‘வயிட் இஞ்சுரி’ என்று அழைக்கிறார்கள்.

ஆனால் முட்டையை வேகவைக்கும்போது, இந்த அவிடின் சத்து, வேலை செய்யாமல் போய்விடும். இந்நிலையில் பையோட்டீன் குறைபாடு ஏற்பட்டால் மரணம் கூட ஏற்படலாம்.

இந்நிலையில் பச்சை முட்டை சாப்பிடுவதால், அதில் சால்மோனெல்லா பாக்ட்டீரியா உள்ளது. இது உணவை விஷமாக மாற்றும். இதனால் நமக்கு காய்ச்சல், வயிற்று வலி ஏற்படும். மேலும் கடுமையான உடல் உபாதைகள் ஏற்படும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment