சரியான உணவுகளை உட்கொள்வது நம்மை மனநிறைவுடன் வைத்திருப்பது மட்டுமல்லாமல் உடலை வலுவான வைத்திருக்கவும் உதவுகிறது.
இருப்பினும், பொருந்தாத தவறான உணவுகளை நாம் எடுக்கும்போது, நாம் பெரும்பாலும் செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
ஏனென்றால், ஆயுர்வேதம் ஒவ்வொரு உணவையும் ஒரு குறிப்பிட்ட கலவை, தரம், உள் வெப்பநிலை மற்றும் அது உடலுக்குள் நுழையும் போது ஜீரணமாகும் நிலை என வகைப்படுத்துகிறது.
இதனை ஆயுர்வேத நிபுணர் டாக்டர் ரேகா ராதாமோனி தொகுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அதில், “இந்த அளவுருக்கள் அனைத்தும் ஒரு உணவு ஜீரணிக்கக்கூடியதா அல்லது ஜீரணிக்க முடியாததா, ஊட்டமளிப்பதா அல்லது ஊட்டமளிக்காததா என்பதை தீர்மானிக்கிறது,
மேலும் இது வளர்ச்சிக்கு உதவுகிறதா அல்லது எதிர்மாறாக செயல்படுகிறதா என்பதை பார்க்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
- தொடர்ந்து அவர், செரிமான ஆரோக்கியத்திற்கு நல்லதல்லாத சில பொதுவான உணவு சேர்க்கைகளையும் பட்டியலிட்டுள்ளார்.
- அவை,
- பால்- பழங்கள் (வாழைப் பழம்)
- குளிர்ந்த உணவுகள்- சூடான உணவுகள்
- சீஸ்-பழங்கள்
- கோதுமை-நல்லெண்ணெய்
- சிக்கன்-தயிர்
- மதுபானம்-தேன்
- தயிர்-சூடான உணவுப் பொருள்கள்
- வாழைப் பழம்-தயிர்
- பால்-வெல்லம்
ஆகியவை ஆகும். இந்த உணவுப் பொருள்களை பெரும்பாலும் தொடவே கூடாத உணவு காம்பினேஷன் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஊட்டச்சத்து மற்றும் உணவு நிபுணர் மருத்துவர் ருசி சோனி, “உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவு நுகர்வுகள்” குறித்து தெரிவித்துள்ளார்.
அவை,
- தேநீரில் மஞ்சள் கலந்து அருந்தக் கூடாது.
- வாழைப்பழம் மற்றும் பால் ஒரு மோசமான கலவை.
- கீரை மற்றும் பனீர் ஆரோக்கியமான கலவை அல்ல.
- பழங்கள் தானியங்கள், இறைச்சிகள் ஒன்றாக உண்ணுவது செரிமானப் பிரச்னையை ஏற்படுத்தும்.
- மீனும் பாலும் ஒன்றாக சாப்பிடக்கூடாது.
ஆகியவை ஆகும். மருத்துவர்களின் இந்த பதிவுக்கு பலரும் பாஸிடிவ் ஆன ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/