Advertisment

எந்த முயற்சியும் சுகர் அளவை குறைக்கலயா? நீங்க சாப்பிடுற ஸ்நாக்ஸ்தான் பாஸ் முக்கியம்: நிபுணர் சொல்லும் அட்வைஸ் இதுதான்

சுகர் நோயாளிகளுக்கு உகந்த பிஸ்கட் என்று விற்பனை செய்யப்படும் பொருட்களில் நம்பகத்தன்மை குறைவாக உள்ளது. சிப்ஸ்க்கு பதில் வறுத்த விதைகளும், ஸ்வீட் சாப்பிட வேண்டும் என்றால் டார்க் சாக்லேட் துண்டுகளும், ரஸ்க்கு அல்லது பிஸ்கட்டுகளுக்கு பதில் வறுத்த வேர்கடலையும் சாப்பிடலாம்.

author-image
WebDesk
New Update
நீங்க சாப்பிடுற ஸ்நாக்ஸ்தான் பாஸ் முக்கியம்: நிபுணர் சொல்லும் அட்வைஸ் இதுதான்

நீங்க சாப்பிடுற ஸ்நாக்ஸ்தான் பாஸ் முக்கியம்: நிபுணர் சொல்லும் அட்வைஸ் இதுதான்

சர்க்கரை நோய் நிபுணர் அம்ரிஷ் மித்தல், சர்க்கரை நோயாளிகள் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதில் கவனக் குறைவாக இருக்க கூடாது என்று கூறுகிறார்.

Advertisment

குறிப்பாக இவரிடம்  சிகிச்சை பெறும் சர்க்கரை நோயாளி ஒருவர் சிக்கிசை எடுத்து வருகிறார். அவரது எச்.பி.ஏ. 1.சி  அளவு 8 சதவித்தைவிட்டு குறையவே இல்லை. கட்டுப்பாடான உணவு முறை மற்றும் உடல் பயிற்சி செய்து வந்தபோதும், அவரால் 7% எச்.பி.ஏ.1.சி  அளவை எட்ட முடியவில்லை. அப்பொழுதான் அவர் காலை மற்றும் மாலை டீயுடன் ஸ்நாக்ஸ் எடுத்துக் கொள்வது தெரியவந்துள்ளது.

குறிப்பாக காலை டீயுடன்  சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த, பிஸ்கெட்டுகள் மூன்றையும், 11 மணிக்கு மிச்சரையும். மாலை பொறித்த தட்டையையும் சாப்பிடுகிறார். இந்நிலையில் இந்த ஸ்நாக்ஸ் அவரது சர்க்கரை அளவை பாதிக்கும் என்று அவருக்கு தெரியவில்லை. இதுதான் முக்கிய பிரச்சனை என்று கூறுகிறார் மருத்துவர் அம்ரிஷ் மித்தல்.

குறிப்பாக நாம் வெறும் மூன்று வேளை சாப்பாட்டை மட்டுமே சாப்பிடுவதில்லை. அனைவருமே ஸ்நாக்ஸ் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் இந்த ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை தவிர்ப்பது சரியான முடிவு அல்ல. ஆனால் அதை ஆரோக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டும். சுகர் நோய்க்கு மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர்கள், அதிக அளவில் ஒரே அடியாக உணவை சாப்பிடக்கூடாது. மேலும் 3 வேளை உணவுக்கு நடுவில் நிச்சயம் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும். சுகர் நோயாளிகள் அதிக நேரம் உணவு எடுத்துக்கொள்ளாமல் இருந்தால், அது நிச்சயம் சர்க்கரை அளவை  குறைத்து, தலை சுற்றல் ஏற்படும்.

எண்ணெய்யில் அதிகம் பொறித்த உணவை ஸ்நாக்ஸாக எடுக்க வேண்டாம். அதுபோல நடு இரவில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது உடலை மிக மோசமாக பாதிக்கும்.

ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்

முதல் தேர்வாக பாதாம், பிஸ்தா, வால்நட் தான் இருக்க வேண்டும். வறுத்த பிளக்ஸ் விதைகள், எள்ளு, சியா விதைகள் நிச்சயம் சாப்பிடலாம். அதுபோல தேனில் , உப்பில் போட்ட நட்ஸை நிச்சயம் எடுத்துக்கொள்ள கூடாது. அதில் எந்தவித சத்தும் இல்லை மற்றும் கூடுதல் கலோரிகளை கொண்டது.

இதுபோல நாம் சாப்பிடும் ஸ்நாக்ஸ்-யில் 15 கிராம் கார்போஹைட்ரேட்டுக்கு அதிகமாக இருக்க கூடாது. அதுபோல அதில் புரோட்டீன், நார்சத்து இருக்க வேண்டும்.

சில ஸ்நாக்ஸ் ஆப்ஷன்: 50 கலோரிகளுக்கு மிகாமல் இருக்கும் ஸ்நாக்ஸ்

1 சிறிய ஆப்பிள்- 37 கலோரிகள்

80 கிராம் ப்ளூபெரிஸ்- 32 கலோரிகள்

138 கிராம் பீச் பழம்-46 கலோரிகள்

1 கோதுமை தோசை- 45 கலோரிகள்

25 கிராம் காட்டேஜ் சீஸ்- 26 கலோரிகள்

10 பாதாம்- 61 கலோரிகள்

1 அவித்த முட்டை -79 கலோரிகள்

1 கரண்டி தோக்ளா- 80 கலோரிகள்

25 கிராம் வறுத்த மக்கானா- 90 கலோரிகள்

மேலும் சுகர் நோயாளிகளுக்கு உகந்த பிஸ்கட் என்று விற்பனை செய்யப்படும் பொருட்களில் நம்பகத்தன்மை குறைவாக உள்ளது. சிப்ஸ்க்கு பதில் வறுத்த விதைகளும், ஸ்வீட் சாப்பிட வேண்டும் என்றால் டார்க் சாக்லேட் துண்டுகளும், ரஸ்க்கு அல்லது பிஸ்கட்டுகளுக்கு பதில் வறுத்த வேர்கடலையும் சாப்பிடலாம். அதுபோல ஐஸ்கிரீமுக்கு பதில் ஒரு கப் தயிரை நாம் சாப்பிடலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment