scorecardresearch

நம்ம பாட்டி தரும் கைமருந்து : இது சரிபட்டு வருமா?

இப்படி பல விஷயங்களை நம் முன்னோர்கள் கூறியிருந்தாலும். முன்னோர்கள் சொல்வதை அப்படியே கேட்க வேண்டும் என்று அவசியம் இல்லை. நாம் வாழும் காலத்தில் ஆய்வு பூர்வமாக எது மருத்துவர்களால் பரிந்துரைக்க படுகிறதோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்.

நம்ம பாட்டி தரும் கைமருந்து : இது சரிபட்டு வருமா?

நமது வீட்டில் சில நோய்களுக்கு கை மருந்து செய்து சாப்பிடுவோம். எதற்கு மருத்துவர்களிடம் செல்ல வேண்டும் என்று வேறு கூறுவோம். ஆனால்  இது ஒரு அளவு உடலுக்கு நன்மை தருவதுபோல் இருந்தாலும், மருத்துவரிடம் செல்லாமல் இருப்பது நோய்யின் தன்மையை அதிகரிக்கும். சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், மாரடைப்பு  போன்ற நோய்களுக்கு ஆங்கிலே வைத்தியம் அதாவது அலோபதி மருத்துவம்தான் சிறந்தது. இதற்கு அறிவியல் ரீதியான ஆய்வுகள் இருக்கிறது. அலோபதி மருந்துதோடு இதையும் சாப்பிடுங்கள்.

தேன்

குறிப்பாக தேனில் அதிக நன்மை இருப்பதாக கூறப்படுகிறது. கை மருந்து கசக்கும் என்பதால் அதில் தேன் கலந்து சாப்பிடலாம் என்று கூறுவார்கள். ஆனால் நமக்கு இப்போது கிடைக்கும் தேனில் சர்க்கரைதான் அதிகமாக கலந்துள்ளது. இதனால் தேனை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

பொதினா

பொதினா எண்ணேய் தலை வலிக்கு நல்லது என்று கூறப்படுகிறது. மேலும் பொதினா இலைகள் வயிறு உப்புதல், நெஞ்சு எரிச்சல், வாயுத் தொல்லையிலிருந்து விடுபட உதவும் என்று கூறப்படுகிறது. இதற்கு எந்த வித ஆய்வுகளும் இல்லை.

வெந்தயம்

டீயில் இதை கலந்து கொடுத்தால் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பால் சுரக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இதில் அதிக நார்சத்து இருப்பதால் மலச்சிக்கலை தடுக்கும். கூடுதலாக இன்சுலின் செயல்பாட்டை ஊக்குவிக்கும்.

மஞ்சள்

ஆசியாவின் பாரம்பரியமே மஞ்சலில்தான் இருக்கிறது. குறிப்பாக தமிழகம், கர்நாடகா, கேரளா இப்படி பல்வேறு மாநிலத்தின் முக்கிய சமையல் பொருளாக இருக்கிறது. வலியை குறைப்பது முதல் வீக்கத்தை குறைப்பது வரை இதன் பண்புகள் ஏராளம். நோய் கிருமிகளுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது. இதனால் மஞ்சளை நாம் தவிர்க்க இயலாது. 

இப்படி பல விஷயங்களை நம் முன்னோர்கள் கூறியிருந்தாலும். முன்னோர்கள் சொல்வதை அப்படியே கேட்க வேண்டும் என்று அவசியம் இல்லை. நாம் வாழும் காலத்தில் ஆய்வு பூர்வமாக எது மருத்துவர்களால் பரிந்துரைக்க படுகிறதோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Will these home remedies work what science says