இந்த குழம்புக்கு எந்த காய்கறியும் வேணாம்... 2 நாள் வச்சு சாப்பிடலாம்!

காய்கறிகள் எதுவும் தேவையில்லை. மழைக்கு காலத்திற்கு ஏற்ப நல்ல காரசாரமான குழம்பு செய்வது பற்றி பார்ப்போம். இந்த குழம்பை 2-3 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். கொட்டுப் போகாது.

காய்கறிகள் எதுவும் தேவையில்லை. மழைக்கு காலத்திற்கு ஏற்ப நல்ல காரசாரமான குழம்பு செய்வது பற்றி பார்ப்போம். இந்த குழம்பை 2-3 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். கொட்டுப் போகாது.

author-image
WebDesk
New Update
10 நிமிடத்தில் ஈசியா செய்யலாம்…சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த பூண்டு குழம்பு

காய்கறிகள் எதுவும் தேவையில்லை. மழைக்கு காலத்திற்கு ஏற்ப நல்ல காரசாரமான குழம்பு செய்வது பற்றி பார்ப்போம். இந்த குழம்பை 2-3 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம், கொட்டுப் போகாது. 

Advertisment

மிளகு - 1 ஸ்பூன்
வெந்தயம்-  1 ஸ்பூன்
சீரகம்  1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3 
தேங்காய் 
புளி
கறிவேப்பிலை 
சின்ன வெங்காயம்- கால் கப்
பூண்டு- 25 பல்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்

செய்முறை

அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காயவிட்டு மிளகு, வெந்தயம், சீரகம், மிளகாய், நறுக்கிய வடிவில் தேங்காய் சேர்த்து தாளிக்கவும். அடுத்து புளியை கிள்ளி கிள்ளி சேர்க்கவும். பச்சை வாசனை போக வறுக்கவும். அடுத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதை இப்போது எடுத்து தனியாக வைக்கவும். 

Advertisment
Advertisements

இப்போது மீண்டும் அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைக்கவும். அடுப்பை அணைத்து விடவும். இந்த பொருட்கள் ஆறிய பின் மிக்ஸியில் போட்டு அரைக்கவும் அதோடு அடுத்து கடைசியாக வறுத்த சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து அரைக்கவும்.

இப்போது அதே கடாயில் மீண்டும் எண்ணெய் ஊற்றி வெந்தயம், மிளகு, கடுகு போட்டு தாளித்து 5,6 சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, பூண்டு சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி பின் அரைத்து வைத்த பொருட்களை சேர்த்து தண்ணீர் ஊற்றி 1 துண்டு வெல்லம், உப்பு சேர்த்து வேகவிடவும். கொதித்து வந்த உடன் இறக்கவும். அவ்வளவு தான் மிளகு குழம்பு ரெடி. 

 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: