இட்லி மாவு, பொட்டுக்கடலை வைத்து இந்த ரிப்பன் பக்கோடா செய்து பாருங்கள். ரொம்ப சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
இட்லி மாவு
பொட்டிக்கடலை
மிளகாய் பொடி
சீரகத் தூள்
ஓமம்
எண்ணெய்
தண்ணீர்
செய்முறை : ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் பொட்டுக்கடலையை நன்றாக வறுக்க வேண்டும். இது நன்றாக ஆரியதும். மிக்ஸியில் போட்டு, நன்றாக பொடியாக அரைக்கவும். ஒரு கண்ணாடி பாத்திரத்தை எடுத்து, அதில் ஒரு கப் இட்லி மாவை எடுத்துக்கொள்ள வேண்டும். அரைத்த பொட்டுக்கடலை பொடியை சேர்க்க வேண்டும்.

அதில் அரை டீஸ்பூன் மிளகாய் தூள், கால் டீஸ் பூன் சீரகப் பொடி, ஓமம் , எண்ணெய் ஒரு ஸ்பூன், தண்ணீர் சேர்த்து கலக்கவும். மாவை நன்றாக பிசைய வேண்டும். இடியாப்பம் புழியும் அச்சில், இரண்டு கோடுகள் கொண்ட அச்சை பொறுத்தவும். இந்த இடியாபம் புழியும் அச்சில் மாவை போட்டு, எண்ணெய்யில் பொறித்தி எடுக்கவும்.