scorecardresearch

வெள்ளரிக்காய் கொஞ்சம் இஞ்சி:  உடலை சுத்திகரிக்க புது டிரிங்

நமது உடலில் உள்ள நச்சுதன்மைகளை, இந்த தண்ணீர் வெளியேற்றும். இதனால் நமது நோய் எதிர்ப்பு சக்தியை இது அதிகப்படுத்தும். இந்நிலையில் இந்த இஞ்சி, வெள்ளரிக்காய், புதினா, எலுமிச்சையை சேர்த்து ஒரு டிடாக்ஸ் தண்ணீர் செல்லலாம்.

இந்நிலையில் இதை நாம் தண்ணீரோடு சேர்த்து சில மணி நேரம் அப்படியே விட வேண்டும் அல்லது இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட வேண்டும். இந்நிலையில் வெள்ளரிக்காய்யை இஞ்சி மற்றும் எலுமிச்சையோடு சேர்த்து குடிக்கும்போது, புத்துணர்வு மற்றும் ஆரோக்கியத்தை கொடுக்கும்.

தேவையான பொருட்கள்

ஒரு வெள்ளரிக்காய்

ஒரு எலுமிச்சை

இஞ்சி துண்டுகள்

புதினா இலைகள்

சியா விதைகள்

1 லிட்டர் தண்ணீர்

ஐஸ்

இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும்.  இந்த தண்ணீரில் ஆண்டி ஆக்ஸிடண்ட் இருப்பதால், உடலில் உள்ள நஞ்சுகளை வெளியேற்றும். இதில் வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாஷியம் இருக்கிறது. எலுமிச்சையில் வைட்டமின் சி இருப்பதால்  இது இயற்கையாகவே உடலை சுத்திகரிக்கிறது. இந்த தண்ணீரால் ஜீரண சக்தியை அதிகரிக்க முடிகிறது. இதனால் கூடுதலாக நோய் எதிர்பு சக்தி அதிகரிக்கும். இதனால் ஆரோக்கியமான சருமம் கிடைக்கும். இந்நிலையில் தண்ணீரில் அதிக சத்துக்கள் கலந்து, அது உடலுக்கு செல்கிறது. மேலும் கூடுதல் கலோரிகளை இது கொண்டிருக்கவில்லை .

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: With no extra calories this cucumber lemon ginger water comes with detox benefits