scorecardresearch

முட்டை மஞ்சள் கருவை காக்காவுக்கு போடாதீங்க.. நீங்க சாப்பிடுங்க.. இவ்ளோ நன்மை இருக்கு!

முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடுவதா? வேண்டாமா என்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது.

With or without the yolk The best way to consume eggs is
முட்டையை எப்படி சமைத்து சாப்பிடுவது?

முட்டையில் உள்ள மஞ்சள் கருவில், கொழுப்புகள் மற்றும் கொலஸ்ட்ரால் இருப்பதாக நம்பப்படுவதால், பலர் மஞ்சள் கரு இல்லாமல் முட்டைகளை உட்கொள்கிறார்கள்.

ஆனால், ஊட்டச்சத்து நிபுணர் மேக் சிங், “முட்டையின் மஞ்சள் கருவில் இதயத்திற்கு ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் உள்ளது.
இது நன்மை பயக்கும். அத்துடன் முட்டை மஞ்சள் கருவில் ஒப்பீட்டளவில் நல்ல அளவு புரதம் இருப்பதுடன், ஒமேகா-3 கொழுப்புகள் உள்ளன. இதில் இதயத்திற்கு ஆரோக்கியமான சத்துக்கள் உள்ளன” எனக் கூறுகிறார்.

முட்டையின் நன்மைகள்

  • முட்டைகள் ஒரு முழுமையான புரத மூலமாகும், அதாவது அவை உடலுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் கொண்டிருக்கின்றன.
  • முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள கோலின் (choline ) மூளையின் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் முக்கியமானது.
  • முட்டையில் லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் உள்ளன, இவை ஆக்ஸிஜனேற்றிகள், அவை வயது தொடர்பான மாகுலர் சிதைவைத் தடுக்க உதவும்.
  • முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்தவும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.

தொடர்ந்து முட்டையை அவித்து சாப்பிட வேண்டும் எனக் கூறிய அவர், முட்டை சத்தான உணவாகும், இது பல ஆரோக்கிய நன்மைகளைத் தரக்கூடியது என்றார்.
இதையடுத்து, முட்டைகளை உட்கொள்ளும் முன் ஆரோக்கியமான சமையல் முறைகளைத் தேர்ந்தெடுப்பது மற்றும் தனிப்பட்ட உடல்நலக் கவலைகள் அல்லது கட்டுப்பாடுகளை மனதில் வைத்துக் கொள்வது அவசியம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: With or without the yolk the best way to consume eggs is

Best of Express