முட்டை சேர்க்காத சுவையான பட்டர் பிஸ்கட் வீட்டிலேயே செய்யலாம்.
தேவையான பொருட்கள்
கண்டன்ஸ்டு மில்க்- 1 பாட்டில்
சோளமாவு (கான்பிளவர்)- 1 கப்
வெண்ணெய்- கால் கப்
உப்பு- சிறிதளவு
செய்முறை
முதலில் கான்பிளவர் மாவை ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து பாத்திரத்தில் கண்டன்ஸ்டு மில்க் ஊற்றி அதில் சிறிது சிறிதாக கான்பிளவர் மாவை சேர்த்து கிளர வேண்டும். சப்பாத்தி மாவு பதத்திற்கு கலவை வந்தவுடன் அதில் வெண்ணெய் சேர்த்து மீண்டும் நன்றாக கிளற வேண்டும்.
அடுத்து மாவுக் கலவையை நன்றாக பிசைந்து சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வட்ட வடிவில் பிஸ்கட்டுகளாக தட்டவும். தட்டு எடுத்து அதில் வெண்ணெய் தடவி வரிசையாக அடுக்கி வைக்கவும்.
இப்போது ஒரு அடி கனமான இரும்புக் கடாய் எடுத்து அதன் உள்ளே ஒரு ஸ்டாண்ட் வைத்து அதை அடுப்பில் 10 நிமிடம் ஃப்ரிஹீட் செய்ய வேண்டும். பின்னர் அதில் பிஸ்கட் வைத்துள்ள தட்டை உள்ளே வைத்து மூடி வைக்க வேண்டும். 15 நிமிடம் வேக விடவும்.
அவ்வளவு தான் சுவையான பட்டர் பிஸ்கட் ரெடி. குழந்தைகள் பள்ளி செல்லும் போது ஸ்நாக்காக கொடுத்து விடலாம். டீ, காபி குடிக்கும் போது சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“