scorecardresearch

கர்ப்பிணிப் பெண்கள் இதை கண்டிப்பா சாப்பிடணும் : நிபுணர்கள் கருத்து

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில், சில தேர்வு செய்த உணவுகளை சாப்பிவது உடலுக்கு நன்மை உண்டாக்கும். கூடுதலாக குழந்தையும் நன்றாக இருக்கும் . இந்த 3 உணவுகளை மிஸ் பண்ணாதீங்க.

உணவுகள்

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில், சில தேர்வு செய்த உணவுகளை சாப்பிவது உடலுக்கு நன்மை உண்டாக்கும்.  கூடுதலாக குழந்தையும் நன்றாக இருக்கும் . இந்த 3 உணவுகளை மிஸ் பண்ணாதீங்க.

பழங்கள்: ஆரஞ்சு, வாழைப்பழம், அப்பிள், பேரிக்காய் உள்ளிட்ட பழங்களில் வைட்டமின் சி, பொட்டாஷியம்,  நார்சத்து இருக்கிறது. உடல் இரும்பு சத்தை எடுத்துக்கொள்ள வைட்டமின் சி சத்து உதவுகிறது. மேலும் பொட்டாசியம் உடலில் உள்ள ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கும்.

முழு தானியங்கள்: பிரவுன் ரைஸ் அல்லது கைகுத்தல் அரிசி சாப்பிடலாம். முழு கோதுமையில் செய்யப்பட்ட  பிரட் சாப்பிடலாம். இதில் கார்போஹைட்ரேட் மற்றும் நார்சத்து இருக்கிறது. நார்சத்து கர்ப்பிணி பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படமால் தடுக்கும்.  

நட்ஸ் மற்றும் விதைகள்: பாதாம், வால்நட், சீயா விதைகள், பிளாக்ஸ் விதைகள் சாப்பிட வேண்டும். இது ஆரோக்கியமான கொழுப்பு சத்து, வைட்டமின் இ மற்றும் மெக்னீஷியத்தை தருகிறது. இந்த ஆரோக்கியமான கொழுப்பு சத்து குழந்தையின் மூளை வளர்ச்சிக்கி உதவும். இதில் இருக்கும் வைட்டமின் இ குழந்தையின் செல்கள் உருவாக்க உதவுகிறது, இதனால் குழந்தை வளர்ச்சியடையும். மேலும் இதில் இருக்கும் மெக்னீஷியம் ஆரோக்கியமான சதைகள் மற்றும் நரம்பு செயல்பாடுகளை ஊக்குவிக்கும்.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Women pregnancy time food for goo health