/indian-express-tamil/media/media_files/2025/03/15/SHS13bzANCKbJJg8AiPL.jpg)
நம் முன்னோர்கள் வழித்தோன்றியாகச் சொல்லிக்கொடுத்த பாரம்பரிய உணவுகளில் பூங்கார் அரிசி மிக முக்கியமான இடத்தை பெறுகிறது. இந்த அரிசி, கர்ப்ப காலத்தில் பெண்கள் கண்டிப்பாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஒன்று என்று டாக்டர் ஜெயரூபா ஸ்ரீவர்மா யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
அதற்கு முன் முதலில் கர்ப்பிணி பெண்கள் பூங்கார் அரிசியை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.
- கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரோக்கியமான இரும்புச் சத்து மற்றும் மெக்னீசியம் வழங்கும்.
- பால் சுரப்பு அதிகரிக்க உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்கும்.
- ஹார்மோன் சமநிலையைக் காக்கும், பிசிஓடி, சர்க்கரை நோய் போன்ற பிரச்சினைகளைத் தடுக்கும்.
- குழந்தையின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும்.
- உதிரப்போக்கு அதிகம் உள்ள பெண்கள் இதனை உணவில் சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பூங்கார் அரிசியை எப்படிச் சமைக்க வேண்டும் என்று பார்ப்போம். பூங்கார் அரிசி மிகுந்த சத்துகளைக் கொண்ட அரிசி என்பதால், சமைக்கும் முன் 2-3 மணி நேரம் ஊற வைத்து பின்னர் சாதமாகவும், இட்லி, தோசை, கஞ்சி, பாயசம் போன்ற பலவகையான உணவுகளாகவும் சமைத்து சாப்பிடலாம்.
கர்ப்பிணி பெண்கள் இதை கஞ்சி மாதிரியும் செய்து சாப்பிடலாம். இதனால் பிரசவ காலம் மிகவும் எளிதாக ஆரோக்கியமானதாக இருக்கும். முதல் மூன்று மாதங்களில் உணவில் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும். இளநீர், மாதுளை, பேரீச்சை ஆகியவை முக்கியமானது. நார் சத்துக்கள் நிரம்பியுள்ள காய் கறிகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மருத்துவர் பரிந்துரையின்பேரின் எளிமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். தினமும் நடைப்பயிற்சி செய்யலாம். குனிந்து வேலை செய்ய முடியாதவர்கள் கூட நடைப்பயிற்சி செய்யலாம் என்று டாக்டர் ஜெயரூபா கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.