டைப் 2 வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் நபர்களுக்கு, பழங்கள் சாப்பிடுவது தொடர்பாக எப்போதும் ஒரு குழப்பம் நீட்டிக்கிறது. இந்நிலையில் ஒரு முழு பழத்தில் உள்ள நார்சத்து, குளுக்கோஸை ரத்தத்தில் வேகமாக கலக்காமல் பார்த்துக்கொள்கிறது.
இந்த நார்சத்து, அதீத பசியை அடக்குகிறது. ஆனால் பழச்சாறுகள், ரத்த சர்க்கரையை அதிகரிக்கும். இந்நிலையில் நாம் எடுத்துக்கொள்ளும் பழங்கள் ஆண்டி ஆக்ஸிடண்ட், வைட்டமின்ஸ், மினரஸ் மற்றும் மைக்ரோ நூட்ரீஷன்ஸ் தேவையை பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும்.
இந்நிலையில், ஒரு முறை சாப்பிடும்போதும் நாம் முழுதான பழங்களை சாப்பிட வேண்டும். இதனால் புளூ பெரிஸ், ஆப்பிள், கிரேப்ஸ் ஆகியவற்றை சாப்பிட்டால் டைப் 2 வகை சர்ககரை நோய் ஏற்படாது.
இதுபோலவே சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்களும், பழங்களை சாப்பிட்டால், சர்க்கரை அளவை குறைக்க முடியும் என்று ஆய்வு கூறுகிறது.
இந்நிலையில் முழுப் பழங்களை நாம் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். ஏதாவது ஒரு நேர சாப்பாட்டோடு சேர்த்துக்கொள்ள கூடாது. அதுபோல கார்போஹட்ரேட் உள்ள உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. இந்நிலையில் நீங்கள் பழங்களை சாப்பிட்டால், மற்ற உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது குறைவான கலோரிகளை கொண்டதாக இருக்க வேண்டும். பழங்களும் உங்கள் கலோரி கணக்குகளுக்குள்தான் வரும்.
ஒருவேளை வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிட முடியவில்லை என்றால், இரண்டு வேளை உணவுகளின் இடைவேளையில் பழங்களை சாப்பிட வேண்டும். பழங்களுடன் நட்ஸ், விதைகள் மற்றும் புரதசத்துள்ள யோகர்ட் அல்லது தயிருடன் சாப்பிடலாம்.
ஒரு நாளைக்கு 30 கிராம் வரை உள்ள அளவில்தான் பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் . இந்நிலையில் இந்த பழங்களில் 15 கிராம் வரை கார்போஹைட்ரேட் இருக்கலாம்.
இந்நிலையில் குறைந்த கிளைசிமிக் பழங்கள் ( 20 - 49 ) ஆப்பிள், அவக்கடோ, செரிஸ், கொய்யா, பீச் பழங்கள், பேரிக்காய் ஆகியவற்றை சாப்பிடலாம். மிதமான அளவு கிளைசிமிக் இண்டக்ஸ் உள்ள பழங்கள் ( 50 – 69) அத்தி பழங்கள், கிரேப்ஸ், ஆரஞ்சு.
இதுபோல அதிக கிளைசிமிக் இண்டக்ஸ் கொண்ட பழங்கள் , பழுத்த வாழைப்பழம், மாம்பழம், பேரிச்சம்பழம் ஆகியவற்றை நாம் பார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.