கூந்தல் உதிர்கிறது என்று நாம் அதிக நாட்கள் கவலை கொள்வோம். ஆனால் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை மறந்துவிட்டு, புகார் மட்டும் செய்து கொண்டே இருப்போம். இந்நிலையில் புரோட்டீன், பி-காம்பிளக்ஸ், ஒமேகா 3 பேட்டி ஆசிட், நார்சத்து உள்ளிட்டவையை நாம் உணவு மூலம் எடுத்துக்கொண்டால் மட்டுமே கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்.
பூசணி
இதில் இருக்கும் விட்டமின் ஏ சத்து கூந்தல் வளர்வதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. மேலும் இதில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஈ, சேதமடைந்த மனித செல்களை சரிப்படுத்தும்.
கேரட்
இதிலும் விட்டமின் ஏ அதிகமாக இருப்பதால் கூந்தல் வேகமாக வளர உதவும்.
சர்க்கரை வள்ளிகிழங்கு
இதில் இருக்கும் பீட்டா-கரோட்டீன் சத்து வைட்டமின் ஏ ஆக மாறும். இதனால் சிபம் ( sebum) என்பது சுரக்கும், இதனால் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்.
குடை மிளகாய்
இதில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் , விட்டமின் சி கூந்தல் வளர்வதை ஊக்கப்படுத்தும். கொலஜன் என்பதை உற்பத்தி செய்ய தூண்டுவதால் கூந்தல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.