பீச் பக்கம் போனீங்கனா இத சாப்பிட மறக்காதீங்க: வறுத்த மக்காச்சோளத்தில் இவ்ளோ நன்மைகளா ?

தீயில் வறுபட்டு, அதில் உப்பு, மிளகாய்த்தூள் தூவி எலுமிச்சை சாறி பிழைந்து தருவார்கள். இந்த சுவை அசத்தலாக இருக்கும் . இது மிக எளிதில் கிடைத்தாலும். நமக்கே தெரியாமால் இதில் அதிக நன்மைகள் இருக்கிறது.

நாம் கடற்கரைக்கு சென்றால் தவறாமல் வாங்கி சாப்பிடும் மக்காச்சோளம். தீயில் வறுபட்டு, அதில் உப்பு,  மிளகாய்த்தூள் தூவி எலுமிச்சை சாறி பிழைந்து தருவார்கள். இந்த சுவை அசத்தலாக இருக்கும் . இது மிக எளிதில் கிடைத்தாலும். நமக்கே தெரியாமால் இதில் அதிக நன்மைகள் இருக்கிறது.

இதில் இருக்கும் வைட்டமின்  ஏ உங்கள் கண்களுக்கு நல்லது. மேலும் இதில் இருக்கும் வைட்டமின் சி உடல் பொலிவை தருவதோடு தோல் சுருக்கத்தையும் ஏற்படாமல் தடுக்கும். மேலும் இதில் வைட்டமின் பி1 இருப்பதால், நமது மூளை சரியாக செயல்பட உதவுகிறது. நமது நினைவாற்றாலை அதிகரிப்பதோடு, வலுவான கூந்தல் வளரவும் உதவுகிறது.

இந்த மக்காச்சோளத்தை நாம் வறுத்து சாப்பிடலாம். அதுபோலவே, காய்கறிகளை சேர்த்து சாப்பிடலாம். மேலும் சூப் மற்றும் மாலை நேரத்தில் ஒரு சாலட் செய்தும் சாப்பிடலாம். இதை சாப்பிடுவதால் அதிக நேரம் பசி ஏற்படாது. சுவையாக இருப்பதோடு, உடலுக்கு நன்மை தருவதாக இருக்கிறது. இனி பீச்சுக்கு போனால் தவறாமல் சாப்பிடுங்க.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Yellow maize nutritional benefits for body