scorecardresearch

21 நாள் சீனியே சாப்பிடாவிட்டால்… இவ்ளோ நன்மை இருக்கு!

பிரபல ஆடை வடிவமைப்பாளர் மசாபா குப்தா 21 நாட்களுக்கு சர்க்கரை மற்றும் சர்க்கரை பொருட்கள் சாப்பிடுவதை தவிர்த்து டயட் மேற்கொண்டுள்ளார்.

21 நாள் சீனியே சாப்பிடாவிட்டால்… இவ்ளோ நன்மை இருக்கு!

பிரபல ஆடை வடிவமைப்பாளர் மசாபா குப்தா 21 நாட்களுக்கு சர்க்கரை மற்றும் சர்க்கரை பொருட்கள் சாப்பிடுவதை தவிர்த்து டயட் மேற்கொண்டுள்ளார். 21 நாட்கள் டயடிற்கு பிறகு அதன் பலன்கள் குறித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 21 நாட்கள் சர்க்கரையை தவிர்த்தேன். நான் அதைச் செய்தேன் என்று என்னால் நம்ப முடியவில்லை. ஆரம்பத்தில் சில நாட்கள் கடினமாக இருந்தது. ஏனென்றால் நம் உடல் அதற்கு பழக்கமாகிவிட்டது. ஆனால் விடாமுயற்சியுடன் போராட வேண்டும். டெசர்ட்/சாக்லேட் போன்றவை எனது மிகப்பெரிய பலவீனம். என் போனில் இருந்த உணவு டெலிவரி ஆப்ஸை கூட டெலிட் செய்து விட்டேன் என்று மசாபா இன்ஸ்டாகிராமில் கூறினார்.

இப்போது, ​​22 நாட்களுக்கும் மேலாக சர்க்கரை இல்லாத டயட் பாலோ செய்து வருகிறேன். இந்த உணவுமுறை மாற்றத்தின் மூலம் பல நன்மைகள் கிடைத்துள்ளது என்று கூறி பலன்களை அவர் பட்டியலிட்டார்.

  1. சிறந்த மூளை செயல்பாடு
  2. வேலையில் அதிக கவனம்
  3. உடற்பயிற்சிகளுக்கு அதிக ஆற்றல்
  4. சரும வெடிப்புகள் இல்லை
  5. நிலையான உடல் எடை
  6. சீரான மனநிலை. தற்போது 22-வது நாளில் இந்த டயட்ரை எளிமையான பின்பற்ற முடிகிறது எனக் கூறினார்.

நிபுணர்கள் கருத்து

அதிக சர்க்கரை உட்கொள்வது உடல் பருமன், நீரிழிவு, இருதய நோய், மோசமான பல் ஆரோக்கியம் போன்ற பல நோய்களுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், சர்க்கரை உட்கொள்வதை மன அழுத்தத்துடன் நிபுணர்கள் தொடர்புபடுத்தியுள்ளனர். எனவே, உணவில் சர்க்கரையை குறைப்பது பல நோய்களைத் தடுப்பதற்கும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கும் ஒரு சிறந்த உத்தியாகும் என்று உணவியல் நிபுணர் கரிமா கோயல் கூறினார்.

அடிப்படையில், “உணவு என்பது இயற்கையான வெகுமதி மற்றும் இனிப்பான எதுவும் இந்த வெகுமதி முறையைத் தூண்டுகிறது மற்றும் ஒரு நபரை அதிகமாக சாப்பிட வைக்கிறது. இனிப்பு சாப்பிடுவதால் ‘ஃபீல் குட் ஹார்மோன்’ டோபமைன் வெளியாவதால் இது நிகழ்கிறது” என்று கோயா கூறினார்.

ஒருவர் எப்படி சர்க்கரையை குறைக்க முடியும்?

சர்க்கரையை குறைக்க குக்கீஸ்கள், இனிப்பு வகைகள், கேக்குகள், ஐஸ்கிரீம்கள் போன்றவற்றைப் பற்றி சிந்திப்பதை நிறுத்த வேண்டும். சர்க்கரை உட்கொள்ளலைக் கட்டுப்படுத்த முயற்சிக்கவும், பின்னர் மெதுவாக அதைக் குறைக்கவும். காலப்போக்கில், அதை உணவில் இருந்து முற்றிலும் விலக்கவும்.

தண்ணீர் குடிக்கலாம்

சர்க்கரை பானங்களுக்குப் பதிலாக தண்ணீர் குடிக்கலாம். தண்ணீர் தாகத்தைத் தணிக்கும். உங்களுக்கு சுவையாக ஏதாவது சாப்பிடத் தோன்றினால் ஒரு கிளாஸ் தண்ணீரில் புதினா இலைகள் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம்.

அடிக்கடி உணவு

சர்க்கரை பசியைத் தவிர்க்க, உங்கள் இரத்த சர்க்கரை அளவை சீரான வரம்பில் வைத்திருங்கள். இதைச் செய்வதற்கான சிறிய மற்றும் அடிக்கடி உணவை உட்கொள்வது. அத்தகைய முறையைப் பின்பற்றுவதன் மூலம், இரத்தத்தில் சர்க்கரை அளவுகளில் எந்த உயர்வும் குறைவும் இல்லை.

இனிப்பு ஏக்கத்தைக் கையாள்வது

இனிப்பு சாப்பிடும் தூண்டுதல் வரும்போது நூடுல்ஸ், புதிய பழங்கள் அல்லது பெர்ரிகளுடன் இனிக்காத கிரேக்க யோகர்ட் சாப்பிடுவதை நோக்கி பழச் சர்க்கரை போன்ற இயற்கையான சர்க்கரை இருப்பது தீங்கு விளைவிப்பதில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Your body is literally addicted to this nonsense masaba gupta goes off refined sugar for 21 days

Best of Express