வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு முறை மாற்றத்தால் தற்போதைய சூழலில் பலரும் நோய்களுக்கு ஆளாகி வருகிறார்கள். வயது பேதமின்றி அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னர், புற்றுநோய் அரிதாகவே காணப்பட்டது. ஆனால், சமீப நாள்களில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது.
எனவே, சாப்பிடும் உணவுகள் சத்தானதாக இருக்க வேண்டும் என பல மருத்துவர்களும், வல்லுநர்களும் தொடர்ச்சியாக பரிந்துரைத்து வருகின்றனர். அந்த வரிசையில் மருத்துவர் சிவராமனும் ஹெல்த் தமிழ் யூடியூப் பக்கத்தில் உணவுகள் குறித்து கூறியதாவது,
இந்நிலையில் புற்றுநோய் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி வழங்கக்கூடிய இரண்டு முக்கிய உணவுகள் பற்றி மருத்துவர் சிவராமன் கூறுகிறார். ஜின்க் சத்துக்கள் பொதுவாக புற்றுநோய் செல்கள் வராமல் தடுக்க உதவும். அவற்றை தினசரி உணவில் நாம் சேர்த்துக்கொள்வது நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
அப்படிப்பட்ட சத்துக்கள் நிறைந்த 2 உணவுவகைகள் என்றால் அது நிலக்கடலை மற்றும் கீரை வகைகள் தான்.
நிலக்கடலை: இது புற்றுநோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நிலக்கடலையில் உள்ள பாலிபனீல்ஸ் என்ற ஆன்டிஆக்சிடென்ட் அமிலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, இளமையை பராமரிக்க உதவும். மேலும் நீரழிவு, இதயநோய், கர்ப்பப்பை பிரச்சனைகள், புற்று நோய் மற்றும் உடல் பருமனையும் கட்டுப்படுத்த உதவும். பெண்களுக்கு கர்ப்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்ப்பபை கட்டிகள், நீர்க்கட்டிகள் பிரச்சனை இருக்காது.
Zinc சத்து இருக்கும் இரண்டே உணவுகள் | Dr.Sivaraman - Zinc
கீரைகள்: கீரைகளில் அதிக அளவில் நோய் எதிர்ப்புப் பண்புகள், ஆக்சிஜனேற்ற பண்புகள், போலேட் சத்துக்கள் உள்ளன. இவற்றில் உள்ள கிளைகோலிபிட் பண்புகள் புற்றுநோய் செல்களின் பெருக்கத்தை தடுக்க உதவும். கீரைகளை பொரியல் வடிவில் எடுத்துக் கொள்வதன் மூலம் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிக அளவில் குறைக்க முடியும். அதேபோல் கடுகு கீரைகள், காலே கீரைகள் ஆகியவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைக்கும் தன்மை கொண்டவை ஆகும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.