Rasi Palan February 10th 2021: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 10th February 2021: இன்றைய ராசி பலன், பிப்ரவரி 10ம் தேதி 2021
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) : மாற்றத்திற்கான சரியான நாள். சமூக சிந்தனைகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். நட்பு வட்டத்தை விரிவுபடுத்த தொடங்குவீர்கள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) : நிச்சயமாக குழப்பத்தை ஏற்படுத்தும் நாளாக இது அமையும். மன அமைதிக்கு முக்கியத்துவம் கொடுங்கள். உங்களின் தனிமனித சுதந்திரத்தை போற்றுங்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21) : மிகவும் பரபரப்பாக காணப்[படுவீர்கள். பாலைவனத்தில் தெரியும் கானல் நீர் போல, சில விஷயங்கள் மறைந்து போகக் கூடும். உள்ளார்ந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள நீங்கள் வேகமாக செயல்பட வேண்டும்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) : வெற்றி – தோல்வியை சமமாக பாவிக்க கற்றுக்கொள்வதன் மூலம் மனசஞ்சலத்தை தவிர்க்கலாம். இயல்பாக இருக்க பாருங்கள். மற்றவர்களுடன் கருத்துவேறுபாடுகளை தவிருங்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) : அவசரமாக செயல்படுவதை தவிர்க்க வேண்டும். எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். நினைத்ததை முடிக்க அதிக பிரயத்தனம் செய்யவேண்டியிருக்கும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) : நண்பர்களின் ஆதரவினால் கடினமான செயலையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். கடந்துபோன ஞாபகங்கள். எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தை தான் பரிசளிக்கும் என்ற பாடத்தை கற்றுத்தந்திருக்கும். இதை வாழ்நாளில் ஒருநாளும் மறக்கமாட்டீர்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) : வரவிருக்கும் அடுத்த இரண்டு நாட்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பக்குவத்துடன் கையாள வேண்டும். அடுத்த இரண்டு, மூன்று மாதங்களுக்கான ஒரு முன்னோட்டமாகவும் இருக்கலாம்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :
மனப் பதற்றம் அதிகரிக்கத் தொடங்கும். ஆனால் உண்மை மிகவும் விசித்திரமானது. நீங்கள், நினைத்த காரியம் விரைவில் கைகூடும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) : இன்று உங்கள் ஆற்றலின் ஏற்ற இறக்கங்கள் வழக்கமான சுழற்சியின் ஒரு பகுதியாகும். திறன்கள் புதியதொரு வாய்ப்பைப் பயன்படுத்துவதற்கான சூழலை அமைத்துக் கொடுக்கும்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20): இந்த வாரம் முழுவதும் அமைதியான மனநிலையுடன் காணப்படுவீர்கள். நற்குணங்களைக் கற்று, முன்னோர்கள் காட்டிய நல்வழியில் செல்ல உந்தப்படுவீர்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) : சில நீண்ட கால திட்டங்கள் குறித்து வாழ்க்கைத் துணவியாரிடம் விவாதிக்க நேரிடம். அதில், சில சங்கடமாக சூழல்கள் ஏற்படலாம். இருப்பினும், இப்போது உங்கள் கருத்தை தன்னம்பிக்கையுடன் முன்வைக்க முடியும். கணிசமான வெற்றியும் உருவாகும்.
மீனம் (பிப். 20 – மார்ச் 20) : விஷயங்கள் எளிதானவை அல்ல. ஆனால், மிகவும் உள்ளுணர்வுடன் செயல்படத் தொடங்குவதால், அனைத்து காரியங்களிலும் வெற்றியைக் காணத் தொடங்குவீர்கள். நீண்டகால தீர்வுகளில் கவனம் செலுத்தப்படுவது மகிழ்ச்சி அளிக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Horoscope at Indian Express Tamil. You can also catch all the latest update on Rasi Palan by following us on Twitter and Facebook