Advertisment

Rasi Palan 15th November 2018: இன்றைய ராசிபலன்

Daily Rasi Palan Tamil, Nov 15, 2018: உங்களைத் தேடி நீங்களே போக வேண்டிய நாள். இது சற்று கடினமாகத் தான் இருக்கும். ஆனால்...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Today rasi palan, rasi palan june 5th, இன்றைய ராசிபலன்

Today rasi palan, rasi palan june 5th, இன்றைய ராசிபலன்

Rasi Palan Today 15th November 2018 in Tamil : வாழ்வில் நமது ஒவ்வொரு செயலுக்கும் பின் விளைவுகள் உண்டு. நல்ல செயல்களுக்கு நல்ல விளைவுகள், தீய செயல்களுக்கு தீய விளைவுகள். இதுவே சத்தியம்.

Advertisment

Rasi Palan 15th November 2018 : இன்றைய ராசி பலன், 15 நவம்பர் 2018

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

உங்களின் தன்னம்பிக்கையை இழந்து காணப்படுவீர்கள். ஆனால், அது குறுகிய காலத்திற்கு மட்டுமே. மீண்டும் புத்துயிர் பெற்று விரைந்து முன்னேறுவீர்கள். மந்தமான நாள் இது.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமெனில், முதலில் நீங்கள் அதில் மிக வலிமையாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான், மிகப்பெரிய வாய்ப்புகள் உங்களை நோக்கி வரும். அதில் உங்களால் ஜொலிக்க முடியும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

இன்று உங்கள் செயலுக்கு பாராட்டு கிடைக்கும் நாள். அதேசமயம், உங்கள் பொறுப்பும், கடமையும் மேலும் அதிகரித்திருக்கிறது. உங்கள் வீட்டில் உள்ளோரின் ஆலோசனைகளை கேட்டு செயல்படுங்கள். வெற்றி நிச்சயம்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

பிரச்சனைகள் சூழ்ந்து கொண்டு உங்களை தாக்கும் நாள். எதேச்சையாக சந்திக்கும் நபர்களால் கூட, சிக்கல்களே உருவாகும். இருப்பினும், அவற்றினை உங்கள் மதியால் வெல்வீர்கள். குறைந்தபட்சம் முயற்சி செய்வீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

மேலே எழும்பி முன்னுக்கு வர வேண்டுமே என்று நினைத்தாலும், உங்களுக்கு எதிராக சில அலைகள் இருக்கும். உங்கள் நண்பர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். நிதிநிலைமை இன்று எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

உங்கள் துணையோ அல்லது உங்களது நிறுவனத்திலோ, நீங்கள் வந்து தான் சிக்கலான பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும் என்று காத்திருப்பார்கள். பண தேவைக்காக, உங்களது சிந்தனைகள் உங்களை விட ஸ்மார்ட்டாக இருக்கும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

மரியாதை வந்து கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள். சிலவற்றிற்காக சிலவற்றை காம்ப்ரமைஸ் செய்து கொள்ளும் சூழல் உருவாகும். உங்களுக்கே தெரியாமல், பின்னால் இருந்து உங்களுக்கு உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

உங்கள் நிலையை அடைந்த பின்னர், அடுத்த இலக்கை நிர்ணயித்து பயணம் செல்வீர்கள். சில பேர், சில சமயம் உங்களை கன்வின்ஸ் செய்ய முயற்சி செய்வார்கள். ஆனால், அதில் எந்த பலனும் இருக்காது. அமைதி வேண்டும் என்றால், அதற்காக நீங்கள் தான் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

உங்களைத் தேடி நீங்களே போக வேண்டிய நாள். இது சற்று கடினமாகத் தான் இருக்கும். ஆனால், உங்கள் மீது மற்றவர்கள் வைக்கும் விமர்சனத்திற்கு பதில் அளிக்க இந்த முயற்சி நிச்சயம் தேவை.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

மற்றவர்களுடன் சேர்ந்து வெற்றியைக் கொண்டாட காத்திருப்பீர்கள். மற்றவர்கள் உங்களிடம் மன்னிப்பு கேட்டால் ஏற்றுக் கொள்வீர்கள். ஆனால், சந்தேகமே வேண்டாம்.. நீங்கள் தான் அனைத்திலும் அதிகாரம் செலுத்தப் போகிறீர்கள் என்று.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

மோசமான தருணங்களை எப்படி கையாள வேண்டும் என்பதை கற்று உணருவீர்கள். அதுவே உங்களுக்கு பயன் அளிக்கும். 'போட்டுத் தான் பார்ப்போமே' என்று சில விஷயங்களை முயற்சி செய்து, அதில் வெற்றியும் பெறுவீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

மற்றவர்கள் உங்களை பற்றி என்ன நினைப்பார்கள் என்று கவலைப்பட வேண்டாம். எவ்வளவு ரிஸ்க்கான காரியமாக இருந்தாலும், அதை சிறப்பாக செயல்படுத்த முயற்சி செய்யுங்கள்.

Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment