Rasi Palan February 9th 2021: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 9th February 2021: இன்றைய ராசி பலன், பிப்ரவரி 9ம் தேதி 2021
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) : சிறு சிறு விசயங்களை கண்டு துவங்க வேண்டாம். இன்னல்களை தெளிவான மனநிலையுடன் அணுகுவது நல்லது. எதார்த்த உலகில் பயணிக்க தொடங்கவும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) : பணியிடங்களில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உள்ளார்ந்த ஆசைகளும், வாழ்க்கை பற்றிய அடிப்படை புரிதல்களும் அதிகரிக்கும். சகாக்களிடம் அறிவுரைகளை கேட்டுப் பெறுவது நல்லது.
மிதுனம் (மே 22 – ஜூன் 21) : வணிக ஈடுபாடுகள் அதிகரிக்கும். பொருளாதார பாதுக்காப்பு குறித்த பயங்கள் புதிய முயற்சிகளுக்கான உந்துதலை தடுக்கக்கூடும். முயற்சி, பயம் இவை இரண்டிற்குமான சமநிலை பாதையில் நடைபோடுவது நல்லது.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23): குடும்ப விஷயங்களில் மீண்டும் தெளிவு பிறக்கும். உண்மையில், ஒரு மாதத்திற்குள் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) : சில பிரிவு அல்லது பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆகையால், முக்கிய விஷயங்களை ஒருசில நாளைக்கு தள்ளிப்போட்டால் நலம். உங்களுக்குள் சில யோசனைகளை கிடைத்தாலும் அதை எப்போது செயல்படுத்துவது என்பதில் சிக்க நீடிக்கும். எனவே, வாயை மூடி சற்று அமைதியாக இருப்பது நல்லது.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) : உங்களை குறைவாக மதிப்பிடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். திட்டமிட்ட செயல்கள் அனைத்தும் நொடிப் பொழுதில் நிறைவேற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தேவையற்றது. மாற்றத்திற்காக போராடுங்கள். மாற்றம் வரும்போது மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளுங்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) : விரைவில் உங்கள் கிரக நிலைகளின் மாற்றத்தால், சிக்கல் நீங்கி நிம்மதி பெருகும். கடினமான தருணங்களை சற்று எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். நட்பு வட்டாரங்களை பெருக்கி கொள்ளவும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) : எடுத்த முடிவுகளில் இருந்து பின்வாங்க வேண்டாம். இருப்பினும், இந்த நேரத்தில் கவனம் தேவை.சரிக்கும், தவறுக்கும் இடையே ஒரு மெல்லிய கோடு தான் உள்ளது. பெற்றோர்களின் ஆசிர்வாதம் வலிமையை தரட்டும்
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) : வஞ்சக வலையை விரிப்பதற்கு இது நேரம் அல்ல. பிறருடன் திறந்த மனதுடன் பழகத் தொடங்குகள். மாற்றங்கள் வரும். பயணத்தின் போது கூடுதல் அக்கறையுடன் இருக்க வேண்டும்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20): உங்களின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும் கடந்தகால செயல்களிலிருந்து புதிய அனுபவங்களை பெறுவீர்கள்.நிதி விவகாரங்களில் அதிக கவனம் வேண்டும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) : முக்கிய திருப்பங்கள் ஏற்படும். சக பணியாளர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். யதார்த்தத்தை உணர்வீர்கள். உங்களின் செயல்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) : தொழில் விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவீர்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil