scorecardresearch

Rasi Palan January 1st 2021: இன்றைய ராசிபலன்

New Year Rasi palan Jan 1st Rasi palan : தயவுசெய்து, தீர்வை நோக்கி பயணியுங்கள். சிறப்பான காரியங்களை உங்களால் செய்ய முடியும்

rasi palan 13th feburary 2021, rasi palan today, இன்றைய ராசிபலன், காலை ராசிபலன் , தினசரி ராசிபலன், ராசி பலன், horoscope, today rasi palan

Happy New Year Rasi Palan jan 1st 2021:  ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 1st January 2021: இன்றைய ராசி பலன், ஜனவர் 1ம் தேதி, 2021

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20):  கடந்தகால வெற்றித் தோல்விகள் கருத்தில் கொள்வதற்கும் அல்லது  எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆராய இது ஒரு முக்கியமான தருணம். வாழ்க்கையின் விலைமதிப்பில்லாத வெகுமதியை நீங்கள் விரைவில் பெறுவீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21): எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை அதிகரிப்பது முக்கியம். பணியிடங்களில் மனக்கிளர்ச்சி, மனஅழுத்தம் உங்கள் வீழ்ச்சிக்கு இருக்கலாம். எனவே, முதலில் சிந்தித்து செயல்படுங்கள் . அனைத்துப் பிரச்சனைகளையும் உன்னிப்பாக கவனிக்கத் தொடங்குகள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21): இது உற்சாகத்திர்கான நேரம். காதல்  வயப்படுவீர்கள். குழந்தைகள் பயனுள்ள பங்களிப்பு மற்றும் தீர்வை வழங்குவார்கள். ஆனால், அவர்கள் தரும் அறிகுறியை  நீங்கள் புரிந்து கொள்ள முன்வர வேண்டும். கலைப் படைப்புகளை ரசிக்க முன்வர வேண்டும்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23):  குற்ற உணர்ச்சி , தாழ்வு மன்பான்மை  போன்ற உணர்சிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டாம். தயவுசெய்து, தீர்வை நோக்கி பயணியுங்கள். சிறப்பான காரியங்களை உங்களால் செய்ய முடியும். பொருளாதார விசயங்களில் மிக கவனமாய் இருப்பது நல்லது.

Happy New Year Rasi Palan jan 1st 2021

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :  இறந்த காலத்தை பற்றி பேசுவதினால் எந்த நன்மையையும் கிடையாது. எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது என்று எண்ணிக் கொள்ளுங்கள். உங்கள் நேரத்தை சிறந்த முறையில்  பயன்படுத்த முன்வர வேண்டும். குடும்ப உறவுகளிடம் நெருக்கம் காட்டுங்கள். பயணத்தில் நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் மனதில் யாராவது இருந்தால்,
தொடர்பு கொண்டு அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23): உங்கள் அதிகாரத்தை செலுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டது என்றே தோன்றுகிறது.  சபையில், உங்கள் வார்த்தை முன்னுரிமை பெறப் போகிறது. நிதி நெருக்கடி குறித்து கவலை கொள்ள வேண்டாம்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) :   உங்கள் வாழ்க்கையை சிறப்பானதாக மாற்றிக் கொள்ள முயற்சிகள் எடுத்து வருகின்றீர்கள். பல்வேறு நிலைகளில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு முன்னேற்றம் காணப்படுகிறது. விடா முயற்சி வெற்றியைத் தரும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) : எந்தவொரு குழப்பமான சூழலும், நிலைத்து நிற்கும் மற்றும் என்றுமே நிலைத்து நிற்கப் போகும் ஒரே விஷயம் மன அமைதி என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் கண்களைத் திறந்து உலகை பார்க்க வேண்டும். பரந்த மேலோட்டமான பார்வையில்  அனைத்தையும் மதிப்பிட வேண்டும் .

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) :  உடல் ஆரோக்கிரம், மனச் சமன்பாடு, உணர்ச்சியில் அமைதி ஆகியவற்றில் கவனம் செலுத்துவது நல்லது. மற்றவர்களுடம் இணக்கம் கொள்ளுங்கள். அமைதியான சிந்தனையில் நேரத்தை செலவிடுவது மிகவும் நல்லது.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20):  விளிம்பி நிலை மக்கள் சந்தித்து வரும் சமூகப் பிரச்சினைகளில் நீங்கள்  கவனத்தை திருப்ப வேண்டும். ஏனெனில்,  பிரச்சனைகளை முழுமையாக புரிந்துக் கொள்ளும் மனப்பக்குவம் உங்களுக்கு வந்திருக்கலாம். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதைத் தாண்டி மாற்றம் மாற்றங்கள் செய்வது அவசியமானது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19): உங்கள் வாழ்க்கை துணையோடு சில மன சஞ்சலங்கள் வந்து நீங்கும்.  ஆனால் அது ஒன்றும் புதிதல்ல என்று உங்களுக்கே தெரியும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. பணியிடத்தில் அதிக வளர்ச்சி காணப்படும்.

மீனம் (பிப். 20 – மார்ச் 20) :  இன்றைய நாள் உங்களுக்கு மிக எளிதாக அமையும். வழக்கத்தைவிட அது மிருதுவானதாக இருக்கும். மற்றவர்களின் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளையும், வாழ்த்துகளையும் நீங்கள் எந்த அளவிற்கு எடுத்துக் கொள்கிறீர்களோ அந்தளவிற்கு நீங்கள் முதிர்ச்சியடைவீர்கள்.

 

Stay updated with the latest news headlines and all the latest Horoscope news download Indian Express Tamil App.

Web Title: Daily horoscope friday 1st january 2021 rasi palan january 1st new year horoscope

Best of Express