Advertisment

Rasi Palan 8th March 2021: இன்றைய ராசிபலன்

rasi palan news : இன்றைய ராசி பலன்களை நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

author-image
WebDesk
New Update
Today rasi palan, rasi palan 8th March, horoscope today, daily horoscope, horoscope 2021 today, இன்றைய ராசிபலன், மார்ச் 8ம் தேதி, இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ், இன்றைய தினசரி ராசிபலன், தினசரி ராசிபலன் , மாத ராசிபலன்,

Today Rasi Palan, 8th March 2021Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 8th March 2021: இன்றைய ராசி பலன், மார்ச் 8, 2021

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :  நீதி விவகாரங்களில் எதிர்பார்த்த முடிவு கிட்டும். நிதி விவகாரங்களில் அதிக கவனம் அவசியம். கிரகங்களின் சாதகமான பார்வையினால், எண்ணிய காரியங்கள் நினைத்தபடி நடக்கும். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21): காதல் உணர்வுகள்  மறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் போனதற்கு உங்கள் இயலாமை மட்டும் காரணமாக இருக்க முடியாது. உங்கள் கூட்டாளர்களும் பொறுப்பேற்று கொள்ள வேண்டும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21):  பணியில் நீங்கள் முன்னேறி செல்ல வேண்டிய தூரம் அதிகம் உள்ளது. தொழில்முறை திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியக் கூறுகள் குறைந்து கொண்டே வருகின்றன. தடுமாற்றத்திற்கான நேரம் இதுவல்ல.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23): லட்சிய கனவுகளை நிறைவேற்றுவதற்கு இதைவிட உகந்த நேரம் இல்லை  என்பதை புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள்.  எந்த வாய்ப்பையும் இழந்து விடாதீர்கள் என்பது உங்களுக்கான மந்திர சொல்லாக இருக்கட்டும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23): வாழ்க்கை அதிக விலை மதிப்புடையதாக தோன்றுகிறது. அனைத்திற்குமான நேரம் வேகமாக நெருங்குகிறது. மற்றவர்களின் வாழ்க்கையில் தலையிடுவதை விடுத்து, உங்கள் சொந்த விருப்பங்களில் கவனத்தை செலுத்தத் தொடங்குகள். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்!

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) : அடுத்த 48 மணிநேரங்களில் உங்கள் கூட்டாளர்களின் ஆலோசனைக்கு ஏற்ப நடப்பது சால சிறந்ததாகும்.    பொன்னான விதி என்று கூட வைத்துக் கொள்ளுங்கள். அவர்களின் அர்த்தமற்ற பேச்சிலும், சிரிப்பிலும் புது அர்த்தத்தை தேடுங்கள். அதிக பலனடைவீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) : தீவிரமாக இயங்கிக்கொண்டே இருங்கள். ஆனால், உடல் நலத்தைப் பேணுவது வாழ்க்கையின் முக்கியமான அங்கமாகி விட்டது என்பதை மறந்துவிடாதீர்கள். உடற்பயிற்சி முறையை வரிசைப்படுத்தி, உணவுப் பழக்கவழக்கங்களை மறுசீரமைக்க தொடங்கவும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) : மகிழ்சிகள் உருவாகும். வழக்கமான பணி சுமைகள் சில சங்கடங்களை ஏற்படுத்தும். இருப்பினும், அணுகுமுறையில் மாற்றங்கள் கொண்டு வருவது நன்மை பயக்கும். நிலையான திட்டமிடல் நடைமுறை வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) : குடும்ப விவகாரங்களில் கூடுதல் அர்ப்பணிப்புடன் நடந்து கொள்வது நல்லது. தொலைந்த இடத்தில் தான் சாவியைத் தேட வேண்டும். விளக்கு எறியும் இடத்தில் அல்ல!

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) : பிறர் செய்ய தயங்குவதை அநாயசமாக செய்து முடிப்பீர்கள். அனுபவங்களிலிருந்து பாடங்கள் கற்றுக்கொள்வீர்கள். நிதி மற்றும் தொழில் விவகாரங்களில் திருப்தி நிலை நிலவும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) : நீண்டநாள் நண்பரை சந்திப்பீர்கள். கற்பனைகள் நிறைந்தது வாழ்க்கை என்பதை உணர்வீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) : மற்றவர்களின் அறிவுரைகளை ஏற்பீர்கள். நிதி விவகாரங்களில் மகிழ்ச்சி நிலவும். உடனடி முடிவுகள் எதிர்பாரத திருப்பங்களை ஏற்படுத்தும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Rasi Palan Midhunam Rasi Palan Kanni Rasi Palan Kadagam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Meenam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment