Rasi Palan 13th January 2021 : ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 13th January 2021: இன்றைய ராசி பலன், ஜனவரி 13, 2021
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) : செயல்களில் கவனச்சிதறல் ஏற்படலாம். இதைத் தவிர்க்க, மிகுந்த நம்பிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம். குடும்பத்தில் நிம்மதி நிலவும். பரவலாக பாராட்டப்படுவீர்கள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) : இலக்குகளை நிறைவேற்ற தன்னம்பிக்கையுடன் கடவுள் வழிபாடு அவசியம். சொந்த விவகாரங்களில் கூடுதல் அக்கறை தேவை. குறிப்பாக, உறவுகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தருணங்களை தவறவிட்டு விடாதீர்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21) : உங்களது நீண்டகால நிதி சேமிப்பு திட்டங்கள் உங்களது பொருளாதார நிலையை வெற்றிகரமாக கொண்டுச் செல்லும். தெளிவான சிந்தனையுடன் செயல்படுவீர்கள். உங்களது தனித்திறமை மூலம் மற்றவர்களை விட வேறுபட்டு தெரிவீர்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) : வெற்றிகள் உங்களைத் தேடி வரும். உங்கள் முடிவுகளில் தெளிவும், முன்னேற்றமும் இருக்கும். அதேசமயம், பொறுப்புகள் கூடும். அதனால் வேலைப்பளுவும் கூடும். இருப்பினும், மன நிறைவுடன் இருப்பீர்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) : விடை தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த தருணங்கள் உருமாறும். எதையும் அப்படி இருக்குமோ, இப்படி இருக்குமோ என்று யோசித்துக் கொண்டிருக்காமல், களமிறங்கி செயல்படத் தொடங்குங்கள். பண விவகாரத்தில் மேலோட்டமாக இருக்க வேண்டாம். யாரையும் எளிதில் நம்ப வேண்டாம்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) : உங்களே நீங்களே மிகவும் தாழ்த்திக் கொள்ளாதீர்கள். சில தருணங்களில் நீங்களே பிரச்சனையை மோசமாக்கி விளைவை அனுபவிப்பீர்கள். பதட்டமான சூழ்நிலையில், 5 நிமிடம் கண்களை மூடிக் கொண்டு அப்படியே அமருங்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) : தடைகளை உடைத்து எறிவீர்கள். உங்கள் இலக்குகளை எட்ட மேலும் கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். வழக்கமான பாணியையே கடைப்பிடித்து, அலுப்பை உருவாக்காதீர்கள். பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்க இன்னும் உழைக்க வேண்டும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) : பிரச்சனைகள் நீங்கும். துன்பங்கள் அகலும். சந்திரன் உங்களுக்கு சாதகமாக இருக்கிறார். ஆனால், உங்கள் மனதில் தோன்றியதை பேசிவிட்டு, பின்பு வருத்தம் தெரிவிக்கிறேன் என சொல்லாதீர்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) : கடினமான நாள் இன்று. உங்கள் மனதில் நம்பிக்கையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் துணையுடன் சகஜமான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். முடிவு எடுப்பதில் தெளிவும், உறுதியும் வேண்டும்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) : நீங்கள் கேட்டவை நிறைவேறும் நாள் இது. விரும்பியவை கிடைக்குமா என்பது சந்தேகமே. கேட்டதற்கும், விரும்பியதற்கும் வித்தியாசம் உண்டு. பணப்புழக்கம் சீராக இருக்கும். உங்கள் நிதி வளர்ச்சியை கணிசமாக மேம்படும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) : உங்களது தவறான முடிவுகள் சில மோசமான விளைவுகளை உங்கள் முன்னேற்றத்தில் ஏற்படுத்தும். செயல்களை சீராக மேற்கொள்ள நீங்கள் மிகவும் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) : உங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்படும். ஆனால், அது பயனுள்ளதாகவே இருக்கும். சிமெண்ட் போட்டு உங்கள் வாயை மூடிக் கொண்டால் நல்லது. பேச்சைக் சற்று குறையுங்கள். வார்த்தைகளில் கவனம் தேவை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil