Rasi Palan February 23th 2021: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 23rd February 2021: இன்றைய ராசி பலன், பிப்ரவரி 23ம் தேதி 2021
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) : உங்களின் ஏற்ற காலம் இன்றும் நீடிக்கும். ஆனால், சில இடங்களில் தடுமாற்றத்தை காண்பீர்கள். பணியிடத்தில் அதே சுறுசுறுப்புடன் இயங்குவீர்கள். புதிய சில நட்புகள் கிடைக்கும். திருப்தியான நாள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) : மற்றவர்களை விட ஒருபடி அதிகம் உழைத்து, அதிகம் பெயரெடுக்க வேண்டும் என்ற உங்கள் கொள்கையில் சிறு மாற்றம் ஏற்படலாம். ஏனெனில், உங்களது திருமணம் குறித்த பேச்சுகள் இனி அடிபடத் துவங்கும். மகிழ்ச்சியான நாள். பிஸ்னஸ் நல்ல லாபம் கொடுக்கும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21) : மற்றவர்களின் ஆலோசனைகளை கிரகித்துக் கொள்ளுங்கள். ஆனால், அதனை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை. இறுதி முடிவு உங்களுடையதாக இருக்கட்டும். அதனால் வரும் லாபமும், நஷ்டமும் உங்களுக்கே. இந்த நிலைப்பாடு தான் தற்போதைய உங்கள் அமைப்புக்கு சிறந்தது.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) : நீங்களகாவே சில தவறுகளுக்கு அப்ரூவர் ஆவீர்கள். அது பணியிடத்தில் உங்கள் மீதான மதிப்பை அதிகரிக்கும். பெற்றோரை நிம்மதியாக வைத்திருக்க வேண்டும் என்று எண்ணுவீர்கள். நண்பர்களின் ஆலோசனை கிடைக்கும். ஏற்றம் பெறும் நாள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) : நீண்ட காலமாக கண்ட கனவு நிறைவேற வாய்ப்புள்ளது. சந்திரன் உங்களுக்கு சாதகமாக இருக்கிறான். அதனால், வெற்றிகள் உங்கள் வசம் வந்து குவியும். நண்பர்கள் ஆச்சர்யப்படுவார்கள். குடும்பமே ஆச்சர்யப்படும். திறமையான உங்கள் ஆளுமை இனி கோட்டை கட்டும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) : எது வெற்றிப் பெறும் என்று நீங்கள் கணித்து வைத்திருந்த சில விஷயங்கள் உங்கள் எண்ணம் போலவே அரங்கேறும். பணியிடத்தில் இந்த கணிப்பு உங்களை வேறு தளத்திற்கு கொண்டுச் செல்லும். மாற்றங்களை அதிகம் எதிர்கொள்ளப் போகும் நாள் இது.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) : சமீப கால டென்ஷனான வேலைக்கு இடையே நிம்மதியை தேடுவீர்கள். வெளியூர் செல்ல முடிவெடுப்பீர்கள். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். ஆரம்பக்கட்டத்தில் உள்ள உங்களது சில பணிகள் முழுமையடைவதில் சில சிக்கல்கள் வந்து சேரும். அதை உங்கள் சாதுர்யத்தால் முறியடிப்பீர்கள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) : பெற்றோர் நிம்மதி அடையும் அளவிற்கு உங்கள் செயல்பாடு இருக்கும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நிலவி வந்த இனக்கம குறையும். ஆதரவு பெருகும். சில சச்சரவுகளை விட்டு நீங்களாகவே வெளியே வருவது நல்லது. பணியிடத்தில் புகழ் கிடைக்கும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) : சில தோல்விகளும், அவமானங்களும் முன்னேற்றத்தின் அடுத்தப் பக்கத்திற்கு உங்களை இட்டுச் செல்லும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொண்டால் நல்லது. குளிர்ச்சியான எந்த உணவையும் எடுத்துக் கொள்ள வேண்டாம். இன்று தோற்றாலும் இனி அடுத்தடுத்து வெற்றி அணிவகுப்பது உறுதி.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) : நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்வார்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். முன்னேற்றம் காணும் நாள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) : நிம்மதி தேடி அலையும் உங்களுக்கு, விரைவில் மகிழ்ச்சியான செய்தி கிட்டும். காதல் கைக்கூடும். திருமணம் ஆகாமல் இருந்தவர்களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்புள்ளது. பணியிடத்தில் வெற்றி கிட்டும்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) : உங்களது முயற்சி வெற்றிப் பெறவில்லையே என்ற கவலைப்பட வேண்டாம். அதற்கான நேரம் இன்னும் வரவில்லை அவ்வளவு தான். தொழில் செய்பவர்களுக்கு சிறிய அளவில் நஷ்டம் ஏற்பட்டாலும், அதனை சரிக் கட்டும் விதமாக அடுத்தடுத்த நாட்கள் ஏற்றமாக அமையும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil