Rasi Palan 26th January 2021 : ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 26th January 2021: இன்றைய ராசி பலன், ஜனவரி 26, 2021
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) : தித்திப்பான நாள். பல நாள் கனவு இன்று நிஜமாக வாய்ப்புள்ளது. குழந்தை பாக்கியம் உண்டாகும். புதிதாக ஒன்றை அடைவதில் உறுதியாக இருப்பீர்கள்
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) : வாழ்வில் நிச்சயமற்ற தன்மை நீடிக்கும். குழப்பமான சூழ்நிலைகள் உருவாகும். இருப்பினும், சாதகமான சூழலை நன்கு அடையாளம் காண்பீர்கள். வரும் காலங்களில் நிலைத்தன்மையும் பாதுகாப்பும் அதிகரித்து வருவதைக் காணலாம்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21): சில கிரகங்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு முன்னேற தூண்டுகின்றன. மற்ற கிரகங்கள் அதே மாற்றத்தை மறுக்கின்றன. எந்த மாற்றங்களும் கனப்பொழுதில் உருவாகுவதில்லை. ஜோதிடங்களும் அவ்வாறு செயல்படுவதில்லை. உண்மையில், இன்றைய நிகழ்வுகள் அனைத்தும்
ஒரு மாதம் அல்லது ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த எதிர்வினையாக இருக்கலாம்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23): மனஅழுத்தம், பதற்றம், மனசோர்வு ஆகியவற்றில் இருந்து விடுபட முயற்சி எடுங்கள். மனநிம்மதியை தேடுகின்ற நீங்கள், அதிகப்படியான யோசனைகளை தவிப்பது நல்லது. வாழ்வில் ஒவ்வொரு நிகழ்வும் எவ்வளவு சரியாக, அமைதியாக கடந்து செல்கிறது என்பதை நினைத்து அமைதி கொள்ளுங்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) : நீங்கள் பொதுவாக உங்கள் சுய நம்பிக்கை கொண்டவர். இருப்பினும், உங்கள் சொந்த விருப்பு/ வெறுப்புகளை மாறுபட்ட கோணத்தில் பார்க்க முன்வரவேண்டும். வாழ்வில், மாற்றங்கள் அளவிடமுடியாதது. வாழ்கையின் புதிர்களை கட்டவிழ்க்க முன்வாருங்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23): பணப் பிரச்சனைக்கு தீர்வு காண்பது மிக முக்கியமான ஒன்றாகும். வருவாயை இரட்டிப்பாக்குவதற்கு தொடர்ச்சியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். வெற்றி உங்கள் வசம் .
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) : விரைவில் பாராட்டுக்கள் குவியும். அடுத்த சில நாட்களில் சில கொண்டாட்ட மனநிலையில் இருப்பீர்கள். கடந்த கால அனுபவங்களை படிப்பினையாக எடுத்துக் கொண்டு, புதிய தொடக்கத்தை உருவாக்கி கொள்ளுங்கள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22): இன்றைய நாள் எளிதானது அல்ல. ஆனால், உங்கள் இயல்பான நடவடிக்கையின் மூலமாக சிக்கல்களை எளிதாக கையாளலாம் . ஆச்சரியமான முன்னேற்றங்கள் இருக்கும். `இப்படி நடக்கும்னு எனக்கு முன்னாடியே தோணிருக்கு! என்ற தேஜா வூ போன்ற உணர்வுகள் வரும். வாழ்க்கை விசித்திரமானது! வெற்றியின் புதிய உச்சங்களைத் தொடுவீர்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22): மிகவும் எதிர்மறையான மனநிலையை விட்டு வெளியேவர முயற்சி எடுங்கள் . சிறிய நம்பிக்கை கூட வாழ்கையின் அடுத்தக்கட்ட முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும். கடமையை செய்ய கொண்டே இருங்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20): வாழ்க்கையின் ஒரு பகுதியில் கிடைத்த வெற்றி மற்றொரு வெற்றியை தாமதிக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நிலையாக இருக்கும் ஒரு பொருளை சிறிது அசைத்து விட்டால் அது மறுபடியும் தனது முதல் நிலையை வந்து அடைவது இந்த பிரபஞ்சத்தின் சமநிலை விதியாகும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) : விசேஷமான ஒருவர் உங்களை அணுகியுள்ளார். இந்த புதிய உறவு வாழ்கையில் நிலைத்தன்மையையும், மதிப்பையும் வழங்கும்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20): மாற்றங்களை உணர்வீர்கள். இல்லற வாழ்க்கையில் மகிழ்சிகள் உண்டாகும். உடனிருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். சிறப்பான நாள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.