Advertisment

Rasi Palan 17th Decemeber 2020: இன்றைய ராசிபலன்

Rasipalan today : உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

author-image
WebDesk
New Update
Today rasi palan, rasi palan 2nd january, இன்றைய ராசிபலன், ஜனவரி 2 , இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ், ராசி பலன்கள்

Rasi Palan 17th Decemeber 2020: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 17th  December 2020: இன்றைய ராசி பலன், டிசம்பர் 17, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

 

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) : மேஷ ராசிக்காரர்கள் மற்றவர்களை வழிநடத்துவதில் அதிக முனைப்புக் காட்டுவது உண்டு. நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார் ! என்ற பாடல் வரிகள் உங்களுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். இருப்பினும், மற்றவர்களை அனுதாபத்துடன் பார்ப்பதை கைவிட்டு, சமமான உணர்வுடன் பார்க்க முன்வரவேண்டும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 - மே 21) : நல்ல அதிர்ஷ்டம் வாழ்க்கையில் சில முன்னேற்றங்களை கொண்டு வரும்.

எனினும், கடந்த காலத்தை விட வரும் நாட்களில் கூடுதல்  பொறுப்பை ஏற்றுக்கொள்வது மிக நல்லது.  வாழ்க்கை பயணத்தில் இது ஒரு தீவிரமான தருணம். நல்லெண்ணம், அன்பு மற்றும் பாசத்தை அதிகரிக்க செய்வது மகிழ்ச்சியைத் தரும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21) :  குடும்பம் மற்றும் சொத்து விவகாரங்களில் குடும்ப உறுப்பினர்களை தங்களின் சொந்த கருத்துப்படி தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்க வேண்டும். அனைத்து பொறுப்புகளிலிருந்தும் உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள் என்று அர்த்தமல்ல.  மாறாக, அன்றாட வாழ்க்கையில் ஒரு விசயத்தில் நீங்கள் தலையிடுவதற்கு முன்பு சில முன்னேற்றங்கள் இயல்பாக  நடக்க அனுமதிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) : : மற்றவர்களுக்கு எதிரான மோதல் போக்கும், புத்திசாலித்தனமான செயல்பாடுகளும் உங்களுக்கு பலம் சேர்க்கும். இருப்பினும், வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது என்று எண்ணுவீர்கள் என்றால், தற்போதைய சூழ்நிலை பல கோணங்களில் மாற்றங்களை சந்திக்கலாம் என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) : வீடு அல்லது பணியிடத்தில் உங்கள் திட்டங்களுக்கான எதிர்ப்பு குறைந்து கொண்டு வருகிறது. உங்கள்

சந்தேகங்கள் அனைத்தும் ஒரு தெளிவான பதிலை பெற்றுள்ளன. வாழ்கையின் சில முக்கிய முடிவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முன்வர வேண்டும் . இருந்தாலும், முக்கிய கேள்வி என்னவென்றால், உங்கள் கூட்டாளி உங்களுடன் சேர்ந்து பயணிக்கத் தயாரகிவிட்டாரா? என்பது தான்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) : நீங்கள் வழக்கத்தை விட அதிக உணர்திறன் கொண்ட மனிதராக இருக்கலாம். எனவே, எளிதில் பலவீனப்படுவீர்கள். ஆனால், மற்றவர்களின் பலவீனங்கள் மீது அதிக இரக்கமும், அனுதாபமும் கொள்வீர்கள். எதிர்காலத்தை வடிவமைத்துக் கொள்ள தேவையான திறன்கள் கொண்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) : வாழ்க்கை பயணத்தின் மிகவும் ரகசியமான தருணம். அதாவது, உங்கள் எண்ணங்களையும், உணர்வுகளையும் மறைக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்.  வெளிப்படைத்தன்மை சில நேரங்களில் தேவையற்றது.     மற்றவர்கள் உங்களை ஆழம் பார்க்க வாய்ப்பு வழங்காமல் இருப்பது மிகவும் நல்லது.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :தொழில் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் முன்னேற்றங்கள் காணப்படும். எனினும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. மாற்றம் ஒன்று மட்டும் மட்டுமே மாறாதது என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டாம்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) :  சிறப்பான வாழ்க்கை நிலையை உறுதி செய்ய, ஓய்வின்றி உழைத்திடுங்கள். உங்கள் வலுவையும், வலுவற்ற நிலைமையையும் முதலில் நீங்கள் நன்கு உணர்ந்து கொள்ளுங்கள். கால உணர்வை கட்டாயம் மனதில் கொள்ள வேண்டும். போதிய கால அவகாசம் உள்ளது என்று நாம் நினைத்தால் அது மிகவும் முட்டாள்தனமானது.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :   உங்களுக்கு மற்றவர்கள் வழக்கத்தை விட மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவதால், தற்போதைய கூட்டாளிகள் பிரச்சினை குறித்து மனநிறைவுடன் இருப்பது மிகவும் விவேகமற்றது. சில நீண்டகால சிரமங்களை நீக்குவதற்கான நேரம் இது. பல உண்மைகள் இன்னும் ரகசியமாக இருக்கும்போது, ​​இறுதி தீர்வு எதுவும் இருக்காது என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்.

கும்பம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :  நீங்கள் இயல்பாகவே வெளியே சுற்றும் நபராக இருந்தாலும், சூழ்நிலைகள் உங்களை ஓரளவு ரகசியமான, தனிமை விரும்பும் மனநிலைக்கு மாற்றியுள்ளது. உங்கள் தனிப்பட்ட விவகாரங்களில் ஊடுருவ மற்றவர்களுக்கு உரிமை இல்லை – எனவே அவர்களை ஏன் அனுமதிக்க வேண்டும்? உங்களுக்கு மிகவும் முக்கியமானவற்றை வைத்துக்கொண்டு, மற்றவர்களுக்கு சிறு துண்டுளை வீசுவீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20): வியாழன் கிரகம் இப்போது உங்களை ஒரு சுய ஒழுங்குடன் உறுதியாக இருப்பதற்கு தூண்டுகிறது. நீங்கள் உங்கள் கனவுகளை அடைய விரும்புகிறீர்கள். ஆனால், அதைச் செய்ய உங்களுக்கு இறுதியாக நடைமுறை விஷயங்களுடன் பிடிப்பு இருக்க வேண்டும். உண்மையில், நீங்கள் கற்பனை செய்வதை விட – அல்லது மற்றவர்கள் எதிர்பார்ப்பதை விட இதுபோன்ற விஷயங்களை கையாள்வதில் நீங்கள் சிறந்தவர்.

Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment