Rasi Palan 18th Decemeber 2020: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 18th December 2020: இன்றைய ராசி பலன், டிசம்பர் 18, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) : நட்சத்திர அமைப்புகளால் நன்மைகள் வந்து சேரும். நோக்கங்களை அடைய ,குறிப்பிட்ட காலக்கட்டத்துடன் கூடிய செயல்திட்டத்தை வகுப்பது நல்லது. மேலும் உங்கள் ஆதரவை மற்றவர்களுக்கு வழங்க முன்வர வேண்டும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) : வாழ்க்கையின் உண்மையான யதார்த்தங்களை எதிர்கொள்ள முடியாதவர்களிடம் இருந்து விலகி செல்வதும், வாழ்க்கையைச் சமாளிக்கத் தயாராக உள்ளவர்களுடன் ஒட்டிக்கொள்வதும் சிறந்ததாக அமையும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21) : உங்கள் வாழ்க்கை துணையோடு சில மன சஞ்சலங்கள் வந்து நீங்கும். உங்களுடன் நெருங்கி பழக மற்றவர்களுக்கு போதிய அவகாசம் கொடுங்கள். பெரிய அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) : அடிப்படை அணுகுமுறையில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டிய நேரம் இது. உங்களுக்கென்று தனியான அடையாளத்தை நீங்கள் வகுக்க முடியாத வரை எந்த பிரச்சனையும் சரி செய்ய முடியாது. வாழ்க்கையில் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று அவ்வப்போது வரும் கேள்விக்கு பதிலை தேடுங்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) : இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சிகரமாக இருக்கும். எந்த காரியத்தை தொட்டாலும் துளங்கும். இதுவரை, நீங்கள் செய்தவை எல்லாம் ஆச்சர்யமானவை. இருப்பினும், மற்றவர்களின் விமர்சனம் மிகவும் அவசியமானது மற்றும் மிகவும் உதவியாக இருக்கும் என்பதை உணர்ந்து கொள்வது மிக முக்கியம்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) : மோதல் அல்லது கருத்து வேறுபாடு கூடாது என்று அமைதியாக விலகிச் சென்றால், உங்களது ஆசைகளும், நம்பிக்கைகளும் எவ்வளவு முக்கியமானது என்று தெரியாமல் போய்விடும். சாத்தியமான மாற்று வழிகளை கண்டுபிடிக்க வேண்டும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) : இன்று உங்களுக்கு சாதகமான நாள் அல்ல. இன்று எதையோ இழந்தது போல உணர்வீர்கள். இது வெறும் உணர்வு மட்டுமே. உங்களிடம் இன்று தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். பணியிடத்தில் ஆர்வம் குறையாமல் செயல்படுவது நல்லது. பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) : கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படுவது நல்லது. தனிப்பட்ட பிரச்சினைகள் மற்றும் நீண்டகால தொழில்முறை வாழ்க்கையிலும் அவர்களின் சிறிய உதவி விலைமதிப்பற்றதாக இருக்கும்.வாழ்கையில் மீண்டும் தெளிவு பிறக்கும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) : மற்ற நாட்களை விட மிகவும் உணர்ச்சிவசப்பட்டு இருப்பீர்கள். உங்களின் மனநிலையில் நிறைய மாற்றங்கள் காணப்படும். எதையும் அமோதிக்கும் நிலைக்கு ஆளாவீர்கள். பொறுமையாகவும் நிதானமாகவும் செயல்படுவது நல்லது.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) : உற்சாகமான மன நிலை உங்கள் விருப்பத்தை நிறைவேற்றும். நம்பிக்கையான சூழல் உருவாகும். நாளின் பிற்பகுதியில் நிதி நிலைமை மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விட்டுக் கொடுத்துச் சென்றால், இன்று போல் ஒரு மகிழ்ச்சியான நாள் கிடையாது.
கும்பம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) : மற்ற கோள்கள் அனைத்தும் உங்களுக்கு உதவி புரிவதால் இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையும். ஒவ்வொரு கடினமான சூழ்நிலையும் உங்களை வலுப்படுத்துகிறது என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள். எப்போதும் நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20): உடல் ஆரோக்கியத்தைப் பேணவும் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கவும் முயற்சி செய்யுங்கள்.இனிப்பு பலகாரங்களை தவிர்ப்பது நல்லது. அது உங்கள் உடல் நலத்திற்கு இப்போதைக்கு ஆகாது. முடிந்தவரை வீட்டில் செய்த உணவுகளையே சாப்பிட்டால் சிறப்பு.