scorecardresearch

Rasi Palan 1st Decemeber 2020: இன்றைய ராசிபலன்

Rasipalan today : உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

rasi palan 25th November 2020, rasi palan today, இன்றைய ராசிபலன், நவம்பர் 25 ராசி பலன், horoscope, today rasi palan

Rasi Palan 1st  December 2020 : ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 1st  December 2020: இன்றைய ராசி பலன், டிசம்பர் 1, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

 

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) 

முயற்சிகளை கையில் எடுக்க வேண்டிய நாள். நீங்கள் இவ்வளவு நாள் பொறுமையுடன் காத்திருந்த வாய்ப்புகள் எல்லாம் கைக்கூடி வருகிறது. சந்திரன் 5வது இடத்தில் இருப்பதால், உங்கள் திறமைகள் மற்றும் முயற்சி எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியை பெற்றுத் தரும்

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) 

இன்று உங்கள் லட்சியத்தை விரிவுபடுத்த வேண்டும் . உங்கள் சாதனைகளில் பெருமை கொள்ள வேண்டிய நேரமிது. ரிஷபம் ராசிக்காரர்கள் எப்போதும் தங்கள் தொழில்முறை வாழ்கையில் முன்னோக்கி செல்வார்கள் என்று சும்மாவாக சொல்லி வைத்தார்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21) ​​இன்று போலவே, உங்கள் புகழ்பெற்ற பேச்சுத்தன்மை அதன் எல்லா மகிமையிலும் வெளிப்படுகிறது. முடிவுகளை எடுத்து தேர்வுகளை எடுக்க வேண்டிய நேரம் இது – ஆனால் நீங்கள் தப்பிக்க முடியாத வாக்குறுதிகளை வெளியிடக்கூடாது.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) நீங்கள் மற்றொரு  நிச்சயமற்ற காலகட்டத்தை நோக்கி செல்கிறீர்கள். இருப்பினும், இந்த காலகட்டம், உங்களுக்கும், உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் புதிய ஒளியை ஏற்படுத்துவதற்கான விடியலை ஏற்படுத்தும். சாத்தியமில்லாத செயல்களை செய்ய முன் வருவீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆக. 23)  சந்திரன் உங்கள் நம்பிக்கையை உயர்த்துகிறது. இருப்பினும், நீங்கள் சற்று உணர்ச்சிவசத்தோடு காணப்படுவீர்கள். கடந்த கால சம்பவங்கள் அனுபவ முதிர்ச்சி  ஏற்படுத்தி இருப்பதுடன், எதிர்பார்ப்பு, இணக்கம் மற்றும் பங்கேற்பு அளவை மேம்படுத்தும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)  உங்களை முதன்மைபடுத்தியது போதும். இனிமேல் நீங்கள் மற்றவர்களின் மன நிலைகளை புரிந்து கொள்ள முன்வர வேண்டும். மறைத்துவைக்கப்பட்ட காதல் ரகசியங்கள் விரைவில் வெளி உலகத்திற்கு வரும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)  இந்த ஆண்டின் சிறப்பான தருணம் இதுவாகும். உங்களை சுற்றிலும் நடக்கும் எஞ்சிய நிகழ்வுகள்வாழ்க்கையின் ஒரு புதிய கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவும்.உங்களைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களுடன் பேச கற்றுக் கொள்ளுங்கள். அமைதியான மனநிலையின் மூலம் மாற்றங்களை உருவாக்கலாம்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) 

வாழ்க்கையில் கனவுகளும், லட்சியங்களும் இரண்டு வகையான வாய்ப்பை உங்களுக்கு அளிக்கிறது.    இருப்பினும்,நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களுடன் கலந்து ஆலோசிப்பது மிகவும் நல்லது.  பிரச்சினைகளை தெளிவாக எதிர்கொள்வது மிகவும் நல்லது.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) 

சந்திரனின் நிலையால், வாழ்கையின் சிறப்பான தருணத்தை உணர்வீர்கள். நீங்கள் முதன்மைப்படுத்தப்படுவீர்கள். நீங்கள் விரும்பியதைச் செய்ய முன்வர வேண்டும். ஒரே பிரச்சனை என்னவென்றால், நீங்கள் துறவியாக இருக்க வேண்டும் என்று மற்றவர்கள் எதிர்பார்க்கிறார்கள்!

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) 

நிதி விவகாரங்களில் அதிக கட்டுப்பாடுகள் வேண்டும்.  உங்களுக்கு சிறிதும் தொடர்பில்லாத  விவகாரங்களுக்கு, தனிப்பட்ட முறையில் நீங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று சிலர் கருதுகின்றனர். தெளிவுடன் இருப்பது நல்லது.  அடுத்த வாரம் இந்நேரத்தில் உங்களைப் பற்றிய எண்ணம் மாறும். மிகவும் மகிழ்ச்சி கொள்வீர்கள்.

கும்பம் (ஜனவரி 31 – பிப்ரவரி 19) 

ஒரு காலத்தில் கைக்கு எட்டாத ஒன்றாக இருந்தவைகள் எல்லாம் விரைவில் உங்களுக்கு கைக்கூடும் என்பதை நீங்கள் இப்போது உணர ஆரம்பிக்க வேண்டும். கல்வி விஷயங்கள், சட்டம் தொடர்பான விவரங்கள், வெளிநாட்டு பயணங்கள் குறித்து மீண்டும் கவனம் செலுத்த தொடங்குகள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) : ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேக்க மாட்டேன்! என்ற வசனம் உங்களுக்கு பொருத்துமாக இருக்கும். நிதி விவகாரங்களில் தன்னிச்சையான, தைரியத்துடன் நீங்கள் எடுக்கும் முடிவுகள் பலரையும் ஆச்சரியப்படுத்தும்.

Stay updated with the latest news headlines and all the latest Horoscope news download Indian Express Tamil App.

Web Title: Dec 1st tuesday rasipalan rasipalan today daily morning rasipalan