Rasi Palan 25th December 2020 : ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 25th December 2020: இன்றைய ராசி பலன், டிசம்பர் 25, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20):
உங்கள் ராசி நட்சத்திரங்கள் ஒரே நேரத்தில் மிகவும் நிதானமாகவும் அதிக ஆர்வத்துடனும் காணத் தொடங்குகின்றன. இதனால், மகிழ்ச்சி பெருகலாம். படைப்பு செயல்பாடுகளில் இப்போது எல்லையற்ற ஆற்றலும் வரம்பற்ற அர்ப்பணிப்பும் தேவை. உண்மையில், மந்தமான கடமைகளில் கூட ஆழ்ந்த திருப்தி கிடைக்கும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21):
வீட்டின் நகர்வு அல்லது வீட்டின் மற்ற நில பெரிய முன்னேற்றங்கள் இப்போது மிகவும் கவர்ச்சிகரமானதாக இருகும். குறைந்தபட்சம் உங்கள் வீடு மற்றும் குடும்ப வாழ்க்கையில் உங்களால் முடிந்த அளவு மகிழ்ச்சியை கொண்டுவாருங்கள். அது உங்களுக்குத் பொருத்தமனாதாக இருக்கும். உங்களுக்கு எது நல்லதோ அது அனைவருக்கும் நல்லதாக இருக்கும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21):
இது முடிவுவெடுப்பதற்கான நேரம். உண்மை என்னவென்றால், நீங்கள் ஒன்றை தேர்வு செய்யத் தள்ளப்படும்போது, அநேகமாக நீங்கள் உணர்ச்சிவசப்பட்டவராக இருப்பீர்கள். இப்போது ஒப்புக் கொள்ளப்பட்டவை அடுத்த மாதம் மீண்டும் மாற்றப்படும் என்பது மிகவும் உறுதியாகத் தெரிகிறது. நீங்கள் நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் விரைவில் ஒரு தனிப்பட்ட பகுதியில் எதிர்பாராத லாபங்களை பெறுவீர்கள். அதுதான் உங்களுக்கு நல்ல செய்தி.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23):
இது உங்களுக்கு நிச்சயமாக ஒரு அரிய தருணம். எல்லாமே வெளியே பார்ப்பதற்கு அமைதியாக இருந்தால், உள்ளே நீங்கள் வெடிக்கக் காத்திருக்கும் ஒரு எரிமலை போல இருக்கிறீர்கள். உங்கள் உணர்ச்சி பாதுகாப்பு ஆபத்தில் இருப்பதாக தெரிகிறது. நீங்கள் அங்கீகரிக்கப்படுகிறீர்கள் என்பதை உணர வேண்டும். அவ்வளவுதான்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23):
இன்று உங்கள் ராசியில் ஒரு உண்மையான கிரக நெருக்கடி உள்ளது. கிரகங்கள் இங்கே, அங்கே மற்றும் எல்லா இடங்களிலும் மாறுகின்றன. நீங்கள் ஒரு குழப்பத்தை சந்திக்கலாம். நீங்கள் எல்லா வகையிலும் உங்களுடைய உணர்ச்சிகளில் மூழ்கிவிடுவீர்கள். எதேனும் முக்கியமான விஷயங்கள் இருந்தால், அதை கையாள்வதற்கு அனுபவம் உள்ளவர்களிடம் ஆலோசனை பெறுங்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23):
உங்களுடைய தற்போதைய கிரக ஆற்றலைப் பயன்படுத்துவதற்கு ஒரு சாதகமான வழி, மாய மற்றும் ஆன்மீக யதார்த்தங்களில் மூழ்கி உங்கள் அன்றாட விவகாரங்களுக்கு அடிப்படையான வடிவத்தைத் தேடுவது. ஒரு அறக்கட்டளை அல்லது பிற நேர்மையான நிறுவனத்தில் உங்களுக்கு ஒருவித தன்னலமற்ற ஈடுபாடு இப்போது அதிகரித்து வருகிறது.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23):
எல்லா விஷயங்களும் நண்பர்கள் என்ன நினைக்கிறார்கள், சொல்கிறார்கள் என்பதைச் சுற்றி இருக்கிறது. உண்மையில் அவர்கள் ஒரு விஷயத்தைச் சொல்லிவிட்டு வேறு ஏதாவது செய்து கொண்டிருக்கலாம். உங்கள் சமூக நட்சத்திரங்கள் கடந்த ஆண்டிலிருந்து எந்த நேரத்திலும் இல்லாத அளவுக்கு தீவிரமாகத் தெரிகின்றன. உங்களை நேசிப்பவரின் அச்சத்தை தணிக்க உங்களுக்கு ஏதேனும் வாய்ப்பு இருந்தால், தயவுசெய்து அதை செய்யுங்கள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22):
உங்கள் ராசியில் தொழில்முறை பரிமாணம் மிகவும் வலுவாக இருக்கிறது. நீங்கள் வேலையில் மகிழ்ச்சியற்றவராக இருந்தால், நடுவில் வேலைகளை மாற்றுவதற்கான அழுத்தம் தவிர்க்கமுடியாததாக இருக்கலாம். நீங்கள் சமூகத்தில் அந்தஸ்தைப் பெறுவதற்கான நேரம் இது. அநேகமாக, நீங்கள் நீண்ட காலத்திற்கு முன்பு தொடங்கிய ஒரு பணியை முடிப்பீர்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22):
நீங்கள் அனைவரும், மக்கள் நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்து ஒருவித பிடிவாதத்தில் சிக்கித் தவிக்கும் அரிய தருணங்களில் ஒன்று இது. விதிகள் மற்றும் தன்னிச்சையான எதிர்பார்ப்புகளைப் பற்றி நீங்கள் மிகவும் வருத்தப்பட்டால், அன்றாட மனித அனுபவத்தின் மகிழ்ச்சியை நீங்கள் இழப்பீர்கள். கடந்து செல்லும் வாய்ப்பையும் இழப்பீர்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20):
இப்போது உங்கள் நிதி விவகாரங்களில் ஒருவித திருப்புமுனை இருப்பதாகத் தெரிகிறது. அநேகமாக அது உங்கள் வளர்ச்சியை வண்ணமயமாக்கும். நேரத்தை மாற்றிக்கொள்வதற்கு பயப்பட வேண்டாம் நீங்கள் கடந்த காலத்தை மறந்தால் நிகழ்காலத்தை கையாள்வதில் மிகவும் சிறப்பாக இருப்பீர்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19):
நீங்கள் இன்று உண்மையிலேயே மற்றவர்களைக் கவனிக்க வேண்டும். அவர்களுடைய பார்வையில் காண்பதற்கு நீங்கள் பின்வாங்க வேண்டும். இது பலனடைவதற்கு எதிராக செல்லக்கூடும். ஆனால், இது ஒரு நல்ல உத்தி. ஏனென்றால், கூட்டாளிகளின் மனதில் இருந்து விஷயங்களைப் பெற வேண்டும். பிரச்னைகள் களையப்பட்டவுடன் நீங்கள் மீண்டும் முன்னிலை வகிக்க முடியும்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20):
உங்களுக்கு பிஸியான நேரங்கள் முன்னால் இருக்கிறது. செய்ய நிறைய வேலை இருக்கிறது. அந்த வேலை ஊதியம் பெறும் வேலைவாய்ப்பை மட்டும் குறிக்காது. உறவுகளும் செயல்பட வேண்டும். சிறந்த கூட்டுறவு உண்மையான பகிர்வு நடவடிக்கைகள் விருப்பங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.