Rasi Palan 2nd Decemeber 2020: இன்றைய ராசிபலன்

உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 2nd December 2020 : ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 2nd December 2020: இன்றைய ராசி பலன், டிசம்பர் 2, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :  நற்பண்பு, திறமை, ஆற்றல் மற்றும் நன்னடத்தையை உருவாக்க முன்வரவேண்டும். அசாத்திய காரியங்கள் செய்ய முற்படுவீர்கள். பாதுகாப்பை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். கிரக அமைப்பு நல்ல முறையில் இருப்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

 

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21):  புதிய தொடக்கம் ஆரம்பமாகும். பணி இடங்களில் பொறுமை தேவை. சிறு சிறு விசயுங்களுக்கும் உணர்ச்சிவசப்பட வேண்டாம்.      வேலையில் வைத்திருக்கும். மற்றவர்கள் மீது   நன்னம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். நேர்மறையான எண்ணங்களை அமைதியை உருவாக்கும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21) :  நிதி நெருக்கடி காரணமாக  கோபமும், எரிச்சலும் ஏற்படக் கூடும். நாட்கள் செல்ல செல்ல அவசர சிக்கல்களைச் சமாளிப்பதற்கான அழுத்தங்கள் அதிகரிக்கும். எனவே,  மனநிறைவுடன் இருப்பதை தவிர்க்க வேண்டாம். தன்னிச்சையாக பிரச்சனையை சமாளிக்கத் தவறினால் , மற்றவர்களின் குறுக்கீடுகள் அதிகமானதாக இருக்கும்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) : வங்கிக் கடன்களின் மீதான  அழுத்தங்கள் அதிகரிக்கும். குடும்பத்தின்  வரவு மற்றும் செலவுகளில் ஏற்படும் தற்காலிக குறைபாடுகளை சங்கடங்களை ஏற்படுத்தும். ஒரு நேரத்தில் ஒரு பிரச்சினையில் மட்டும் கவனம் செலுத்தி, அதற்கு முழுமையான தீர்வை காணுங்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆக. 23) :  உணர்ச்சி நிலைத்தன்மையையும் ஊக்குவிக்க வேண்டும். மற்றவர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அவர்களை முன்னிலைப்படுத்துங்கள். வாழ்க்கை  சுவாரஸ்யமாக அமையும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) :  உடல்நலம் மற்றும் உடற்தகுதி குறித்த விழிப்புணர்வு அவசியம். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, ஓட்டம், நீச்சல், ஆரோக்கியமான உணவுப் பழக்கம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவை இப்போது உங்கள வாழ்வின் ஒரு பகுதியாக மாறி வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) : நீங்கள் ஒரு இராஜதந்திரி.  நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் நாட்டிற்கும், வீட்டிற்கும் எப்போதும் உதவும். இருப்பினும் , இப்போது, ​​புதனின் தாக்கம் அதிகமாக இருப்பதால், சரியான சொற்களை தேர்ந்தெடுத்து பேச வேண்டும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) தொடர்ந்து மூன்றாவது நாளாக தனிப்பட்ட விருப்ப லட்சியங்களில் முன்னிலை பெற்று வருவீர்கள். தற்போதைய காலங்களில், மற்றவர்களை விட உங்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.  இருப்பினும் வார இறுதிக்குள் சமரசம் செய்து கொள்ள முன்வருவீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) குடும்ப உறவுகளை மேம்படுத்துவதற்கான நேரமிது.  தங்கள் குடும்பத்தினருடன் நிறைய நேரத்தை செலவு செய்ய முன்வர வேண்டும். புதிய வாழ்க்கை நியதிகளுக்கு ஏற்ப மாறிக் கொள்ளுங்கள். சிதறல் இல்லாமல் ஒருமித்த கவனம் செலுத்தும் திறன் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)  : மிக விரைவில் காணும் காட்சிகள் மாறும் ; போடும் கோலங்கள் மாறும் ; கொள்ளும் கொள்கைகள் மாறும். நண்பர்களிடம் இருந்து கிடைக்கும் ஆலோசனைகள் மற்றும் யோசனைகளின் படி நடந்து கொள்ளுங்கள்.

கும்பம் (ஜனவரி 31 – பிப்ரவரி 19) :  நீங்கள் மர்மங்களுடன் வாழ் பழகிவிட்டீர்கள். மற்றவர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பு,  உங்களிடம் ரகசியமான திட்டங்களை செயல்படுத்தி விடுங்கள். அமைதியான மனநிலையை பெற முயற்சி செய்யுங்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) : சுறுசுறுப்பாக இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்க முடியும். நீங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் காணவில்லை எனில், மற்றவர்கள் உண்மையைப் அங்கீகரிக்கத் தவறிவிட்டார்கள் என நீங்கள் கூறுவதை சரிதான். அனைத்து வகையான வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

Get the latest Tamil news and Horoscope news here. You can also read all the Horoscope news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dec 2nd wedneesday rasipalan rasipalan today daily morning rasipalan

Next Story
Rasi Palan 1st Decemeber 2020: இன்றைய ராசிபலன்rasi palan 25th November 2020, rasi palan today, இன்றைய ராசிபலன், நவம்பர் 25 ராசி பலன், horoscope, today rasi palan
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com