Rasi Palan 4th December 2020 : ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 4th December 2020: இன்றைய ராசி பலன், டிசம்பர் 3, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) : கடமையைச் செய்வதே மகிழ்ச்சிக்கான வழி என்பதை தாண்டி, கடமைக்கு அப்பாற்ப்பட்ட பணிகளை மகிழ்ச்சியாக செய்யத் தொடங்குகள். ஏமாற்றங்கள் மறைந்து போகும். விரைவில், நல்ல செய்தி வரும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். இனிமையான, சுவாரஸ்யமான வாழ்க்கை பாதை காத்திருக்கிறது. முதலாளிகளும், கூட்டாளிகளும் உங்களுக்கு தேவையான பிரதிபலன்களை தருவார்கள் என்று நம்புகிறோம்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21) சந்திரன் உங்களுக்கு பலம் சேர்க்கும். பணியிடங்களில் நல்ல சூழலை உருவாக்கத் தொடங்குகள். எதிர்காலத் திட்டங்களுக்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளத் தயாராகுங்கள். இதுவரை காணப்படாத, முயற்சிக்கப்படாத அல்லது செய்யப்படாத ஒன்றைப் புதுமையாகச் செய்ய முன்வருவீர்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23): சந்திரன் உங்கள் மனநிலையில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நிம்மதி பெருமூச்சு விடுவதற்கான சாத்தியக் கூறுகள் உருவாகும். ஆக்கபூர்வமாக செயல்படுவது மிக முக்கியம். தேவையற்ற நடவடிக்கைகளை புறந்தள்ளுவது மிக நல்லது.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23): மற்றவர்களின் வளர்ச்சிக்கு உதவுவீர்கள்.முக்கிய ஒப்பந்தங்கள் உங்களை வந்தடையும். மகிழ்ச்சியான நாள். விருந்து, விசேசங்களில் பங்கேற்பீர்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23): மற்றவர்களுடன் விவாதங்களில் ஈடுபடுவீர்கள். மற்றவர்கள் செய்ய தயங்கும் விசயங்களை எளிதாக செய்து முடிப்பீர்கள். அதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23): புத்துணர்வுடன் செயல்பட்டு புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். நிதி விவகாரங்களில் அதிக அக்கறை காட்டுவீர்கள். புதிய அனுபவங்களால் மனம் மகிழ்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22): மன உறுதியுடன் இருப்பீர்கள்.புதிய விவகாரங்களில் வெற்றிகள் கிடைக்கும். விழிப்புணர்வுடன் இருப்பதால் ஏமாற்றங்களை தவிர்க்கலாம். புதிய முயற்சிகள் பலிதமாகும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22): விழிப்புடன் இருந்து புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். முக்கிய விவகாரங்களில் வெற்றிகள் கிடைக்கும். கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20): பொது விவகாரங்களில் அதிக நாட்டம் கொள்வீர்கள். ஒருங்கிணைந்து செயல்படுவதால், பல விவகாரங்களில் வெற்றிகள் கிடைக்கும்.மகிழ்ச்சியான நாள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19): கிரகங்களின் பார்வையினால் புதிய முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். மற்றவர்களின் அறிவுரைகளை ஏற்பீர்கள். பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) : தனித்து வாழ முற்படுவீர்கள். மற்றவர்களின் தவறுகளை திருத்துவீர்கள். வழக்கமான பணிகளிலிருந்து விலகிச்செல்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.