Rasi Palan 8th Decemeber 2020: இன்றைய ராசிபலன்

daily morning Rasipalan : உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasipalan today, daily Rasipalan , Rasipalan 2020 today, today Rasipalan, 8th December Rasipalan, astrology, horoscope 2020, new year Rasipalan, today Rasipalan

Rasi Palan 8th December 2020 : ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 8th December 2020: இன்றைய ராசி பலன், டிசம்பர் 8, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20):

அன்புக்குரியவர்கள் உங்களிடம் சொல்வதற்கு நிச்சயமாக ஒரு பெரிய விஷயம் இருக்கிறது. ஆனால், உண்மையில் நீங்கள் அதை வேறு வழியில்லாமல் விரும்புவீர்கள். இருப்பினும், இப்போது உங்களுக்கு வழங்கப்படும் எந்த ஆலோசனையும் நம்பமுடியாததாக இருக்கலாம். எனவே சொந்தமாக சிந்தியுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, மற்றவர்கள் என்ன நினைத்தாலும், சில நேரங்களில் அவை உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21):

மற்றவர்கள் எல்லா உணர்ச்சிகரமான அச்சுறுத்தல்களிலிருந்தும் அல்லது பிற தடைகளிலிருந்தும் விடுபட்டு, தங்கள் சொந்த வழியில் செல்வதற்கான உரிமையை நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். உங்களுடைய செலவுகள் அதிகரித்து வருகின்றன. அதனால், வீண் செலவுகளைத் தவிர்க்க கவனமாயிருங்கள். மேலும், நீங்கள் பின்பற்றுவது நல்ல ஆலோசனையாக இருந்தால், நீங்கள் மற்றவர்களுடைய ஆலோசனையை எதிர்பார்க்க வேண்டியதில்லை.

மிதுனம் (மே 22 – ஜூன் 21):

குடும்ப வேலைத் திட்டங்களை முடிவு செய்ய வேண்டியுள்ளது. அனேகமாக, உள் அலங்காரம் அல்லது சிறிய பழுதுபார்க்கும் வேலையாக இருக்கலாம். நீங்கள் இந்த வார இறுதிக்குள் நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் உரிய முன்னேற்றங்களை அடைய முயற்சிக்க வேண்டும்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23): 

உங்களுடைய சமீபத்திய ஏற்பாடுகளைப் பற்றி மகிழ்ச்சியடைவதாக யாரோ சிலர் சுட்டிக் காட்டுவார்கள். ஆனால், நீங்கள் இன்னும் எதிர்காலத் திட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டியிருக்கும். மற்றவர்களுடைய வழக்கத்திற்கு மாறான எதிர்பார்க்காத பழக்கங்களையும் நடத்தைகளை சகித்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். நீங்கள் அவர்களுக்கு எது நல்லது என்று உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கலாம். ஆனால் நீங்கள் தவறாக நினைத்திருக்கலாம் என்று பரிசீலிக்கலாம் இல்லையா?

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23): 

உங்கள் ராசியின் காதல் மற்றும் உணர்ச்சி வாழ்க்கையின் திசையைப் பார்க்க விரும்பினால் வெள்ளி கிரகத்தின் நகர்வுகளை கவனிக்க வேண்டும். இப்போதே, இந்த கிரகம் உங்களுக்கு வரும் மாதங்களில் தீவிர அர்ப்பணிப்பும் பாதுகாப்பும் தேவை என்பதைக் குறிக்கிறது. உணர்வுகள் அதிகரித்து வருகின்றன. நம்பிக்கைகள் அதிகரித்து வருகிறது. ஆனால், அவை கைகூடும் என்று அர்த்தமல்ல.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23):

மக்களைச் சம்மதிக்க வைப்பதற்கு உங்கள் வாழ்க்கையில் நீங்கள் போதுமானதைச் செய்திருந்தாலும், உறுதியானவராக இருப்பவர் என்ற நற்பெயர் உங்களுக்கு உண்டு. திடீரென உங்களுடைய சக்தி வெளிப்படும்போது, உண்மையில் கூட்டாளிகள் அதிர்ச்சியடையக்கூடும். இன்னும், நீங்கள் ஏன் அவர்களிடம் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடாது?

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23):

உங்கள் ராசியில் விசித்திரமான புதன் கிரகம் எதையும் எடுத்துக்கொள்ள முடியாது என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்தும். இருப்பினும், மகிழ்ச்சியான நடவடிக்கைகள் மற்றும் அனுபவங்களை நீங்கள் தீவிரமாக நாடினால், எந்த ஏமாற்றங்களும் ஈடுசெய்யப்படும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், நீங்கள் புதிய தொழில்களை விரைந்து செயல்பட்டால் மட்டுமே அடைய முடியும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22):

உங்கள் ராசியில் புதன் கிரகத்தின் விசித்திரமான அம்சங்களுக்கு நீங்கள் கவனம் செலுத்தத் தயாராக இருந்தால், நீங்கள் கூட அறியாத ரகசியங்களைக் கண்டுபிடித்து, உங்கள் மனதின் ஆழத்தில் வீழ்வீர்கள். இது மர்மங்களைத் தீர்ப்பதற்கான நேரம். நண்பர்களிடம் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்பது மற்றும் நிபுணர்களுடன் ஆலோசனை பெறுவதற்கான நேரம் இது.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22):

சமீப வாரங்களில், நீங்கள் கவனக்குறைவாக அதிகாரத்தில் உள்ளவர்களை அல்லது உங்களுக்கு அனுகூலமாக இருக்கும் சக ஊழியர்களை அந்நியப்படுத்தியிருக்கலாம். மறுபுறம், உங்கள் வீரியத்தால் ஆழமாக ஈர்க்கப்பட்டவர்களும் உள்ளனர். இந்த நேரத்தில் உங்கள் ஆற்றல் அதிகமாக உள்ளது. ஆனால், அந்த ஆற்றலில் உங்களை நீங்களே எரித்துக்கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20):

உங்களில் சிலர் பல மாதங்களாக, அல்லது ஆண்டுகளாக தொடர்ச்சியான தாமதங்கள், ஏமாற்றங்கள் மற்றும் மனப்புழுக்கங்களை சுமத்துகிறார்கள். இருப்பினும், இதுபோன்ற துன்பங்கள் தவிர்க்க முடியாதவை என்ற உண்மையை உங்கள் கண்களைத் திறந்து பாருங்கள். உங்களுக்கு ஏதேனும் நுண்ணுணர்வு இருந்தால் உங்கள் சொந்த விதிமுறைகளில் போட்டியாளரை நீங்கள் சமாளிப்பீர்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19):

ஒரு இணைப்பு உடன்பாட்டை எட்டுவதற்கான எந்தவொரு முயற்சியையும் எதிர்ப்பவர்கள் இருப்பார்கள் என்றாலும், நிதி அல்லது சொத்துக்கள் விஷயத்தில் தடையாக இருப்பவர்களுக்கு நீங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும். முடிவெடுக்கும் அதிகாரம் உங்கள் கையில்தான் உள்ளது. எனவே, எல்லையற்ற சாத்தியங்கள் குறித்து உங்கள் சாதாரண பாராட்டுதல்களுடன் தொடருங்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20):

இந்த வார கிரக நிலை தாக்கங்கள் உங்களை புறச்சூழல் நடவவடிக்கைகளுக்கு இட்டுச் செல்லும். உங்களை சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும். அதே நேரத்தில், இன்று உங்களின் தனிமையான, துறவி போன்ற குணங்களை வெளிப்படுத்தும். இந்த முரண்பாடு உங்கள் குழப்பத்தை விளக்குவதற்கு சில வழிகளில் செல்கிறது. நீங்கள் உங்களுக்காக அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்று நினைத்தால், அப்படியே செயல்படுங்கள்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Horoscope news here. You can also read all the Horoscope news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dec 8th tuesday rasipalan today rasipalan daily morning rasipalan

Next Story
Rasi Palan 5th Decemeber 2020: இன்றைய ராசிபலன்Today rasi palan, rasi palan October 30, இன்றைய ராசிபலன், daily horoscope, horoscope 2020 today, மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்,சிம்மம், துலாம், விருச்சிகம் , தனுசு, மகரம் , கும்பம், மீனம் , astrological predictions, அக்டோபர் 30 ராசிபலன், morning rasi palan, காலை ராசிபலன்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com