August 2022 Monthly Rasi Palan: புதன், சுக்கிரன், சூரியன் பெயர்ச்சி; எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்?
August Month Horoscope: ஆகஸ்ட் மாதம் முக்கிய கிரகங்கள் ராசி மாறுவதால், இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் ஏற்படும். அதிர்ஷ்டம் அடிக்கப்போகும் அந்த 3 ராசிகள் எந்த ராசிகள் தெரிந்துகொள்ளுங்கள்.
August Month Horoscope: ஆகஸ்ட் மாதம் முக்கிய கிரகங்கள் ராசி மாறுவதால், இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் ஏற்படும். அதிர்ஷ்டம் அடிக்கப்போகும் அந்த 3 ராசிகள் எந்த ராசிகள் தெரிந்துகொள்ளுங்கள்.
August Month Horoscope: ஆகஸ்ட் மாதம் முக்கிய கிரகங்கள் ராசி மாறுவதால், இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் ஏற்படும். அதிர்ஷ்டம் அடிக்கப்போகும் அந்த 3 ராசிகள் எந்த ராசிகள் தெரிந்துகொள்ளுங்கள்.
Advertisment
ஆகஸ்ட் மாதம் ராசி மாறும் மூன்று கிரகங்கள்:
ஜோதிடத்தில் கிரங்களின் மாற்றம், நட்சத்திரங்களின் பெயர்ச்சி சிறப்பு வாய்ந்ததாக ஜோதிடர்களால் பார்க்கப்படுகிறது. கிரகங்களின் பெயர்ச்சி முக்கியத்தும் வாய்ந்தது என ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.
2022 ஜூலை மாதம் 5 கிரகங்களின் பெயர்ச்சி நடைபெற்றது. அதே போல, ஆகஸ்ட் மாதம் 3 கிரகங்கள் பெயர்ச்சி நடைபெறுகிறது. 3 கிரகங்களும் ராசி மாறுகிறது.
Advertisment
Advertisements
அந்த வகையில், ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி 2022 அன்று புதன் கிரகம் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைகிறது. இதையடுத்து, இரண்டாவது பெயர்ச்சி ஆகஸ்ட் 11 தேதி ஆவணி அவிட்டம் அன்று சுக்கிரன் கிரகம் கன்னி ராசியில் பெயர்ச்சியாகிறது. இதையடுத்து, சூரியனின் ராசி மாற்றத்தால் ஆகஸ்ட் 17 ஆம் தேதி ஆகஸ்ட் மாதத்தின் மூன்றாவது மற்றும் கடைசிப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நாளில் சூரியன் சிம்ம ராசியில் பெயர்ச்சி அடைகிறது.
ஆகஸ்ட் மாதத்தில் புதன், சுக்கிரன், சூரியன் பெயர்ச்சி அடைந்து ராசி மாறுகிறது. இதனால், இந்த கிரகங்கள் மாறுகிற ராசிகளுக்கு மட்டுமல்லாமல், அந்த கிரகங்கள் தாக்கம் செலுத்துகிற ராசிகளுக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும். அந்த வகையில், மிதுனம், துலாம், சிம்மம் ராசிகளுக்கு ஆகஸ்ட் மாதம் முழுவதும் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.
மிதுனம்:
ஆகஸ்ட் மாத கிரகப் பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான பலன்கள் உண்டாகும். கிரகப் பெயர்ச்சியின்போது வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் பாராட்டுகளைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். பணியிடத்தில் மரியாதை கூடும். அதுமட்டுமல்லாமல், சமூகத்தில் மரியாதை உயரும். குடும்பதில் ஒற்றுமை ஏற்படும்.
துலாம்:
ஆகஸ்ட் மாத கிரகப் பெயர்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். துலாம் ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் பெயர்ச்சியால் அதிக லாபம் கிடைக்கும். ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் அதிகரிக்கும். அதே நேரத்தில், அரசுப் பணிகளில் ஈடுபடும் துலாம் ராசிக்காரர்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவார்கள்.தொழிலில் அதிக லாபம் கிடைக்கும்.
சிம்மம்:
ஆகஸ்ட் மாதம் மூன்று கிரகங்களின் பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு உற்சாகம் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் அனைத்துப் பணிகளையும் செய்து முடிப்பீர்கள். இதுமட்டுமில்லாமல், வியாபாரிகளுக்கும் இந்த நேரம் சாதகமாக இருக்கும். கிரகங்கள் பெயர்ச்சி நடைபெறும்போது சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பெருகும். இந்த 3 கிரகப் பெயர்ச்சிகள் உங்களுக்கு மனநிறைவைத் தரும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”