Rasi Palan 14th January 2021 : ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 14th January 2021: இன்றைய ராசி பலன், ஜனவரி 14, 2021
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) : எதிலும் சமரசம் செய்துகொள்ள மாட்டீர்கள். எதை நினைக்கிறீர்களோ அதையே செய்ய முயல்வீர்கள். பிறர் பேச்சை கேட்காததால் அதிக இழப்பை சந்திப்பீர்கள். கருத்துவேறுபாட்டால், பங்குதாரர்களிடையே மனக்கசப்பு உருவாகும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) : இருக்கும் இடத்தை உங்கள் ரசனைக்கேற்ப மாற்றியமைக்க முயல்வீர்கள். உங்களது ரசனை, யாராலும் எளிதாக புரிந்துகொள்ள இயலாமல் இருப்பதால் தனித்தே இருப்பீர்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21) : சுயமுயற்சியில் செய்வதன் மூலமே முழுப்பயனை அடையமுடியும். நண்பர்களின் ஆதரவு, உங்களை திறம்பட செயல்படவைக்கும். சிறந்த நாள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) : முதலில் தன்னை மாற்றிக்கொள்வதன் மூலம், மற்றவர்களிடம் நட்பு பாராட்டலாம் என்பதை உணர்வீர்கள். மற்றவர்களால் புரிந்துகொள்வதற்கு கடினமாக இருப்பீர்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) : தனிநபர் விரோதத்தை தவிர்ப்பது நல்லது. இது பல்வேறு இடர்பாடுகளுக்கு வழிவகுத்துவிடும். ஒரு வேலையை முடித்தபிறகு மற்றொரு வேலையை துவங்குவது நல்லது. ஆற்றில் ஒருகால், சேற்றில் ஒரு கால் என்ற நிலை வேண்டாம்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) : அதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. மன அமைதிக்கு தியானம் உள்ளிட்டவற்றை செய்தல் நலம். உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) : உங்களின் விசயங்களில் மற்றவர்களின் தலையீடு அதிகம் இருப்பதால், அதிகம் கோபப்படுவீர்கள். அமைதியை தேடி பயணம் மேற்கொள்வீர்கள்.
.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) : சிக்கலான தருணங்களில், நண்பர்களின் உதவி உங்களை தேடிவரும். உண்மையான நட்பை அறிந்துகொள்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) : அடுத்த வாய்ப்புக்காக காத்திருக்காமல், இருக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுதல் நலம். அடுத்தடுத்த முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20): வேலைப்பளு அதிகரிக்கும். வீட்டிலும் சுமை இருக்கும். முடிவுகளை எடுக்க திணறுவீர்கள். இதுவும் விரைவில் கடந்துபோகும் என்ற நம்பிக்கையே உங்களுக்கு தற்போதைய மருந்து.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19): உங்களிடம் மற்றவர்கள் அதிகம் எதிர்பார்ப்பர். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற அதிகம் மெனக்கெட வேண்டும் நண்பர்கள் பக்கபலமாக இருப்பர்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20): கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். பரீட்சார்த்த முடிவுகளை எடுப்பீர்கள். கஷ்டமான காரியத்தையும் இஷ்டமாக செய்து அதில் வெற்றியும் பெறுவீர்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.