Advertisment

ராகு கேது பெயர்ச்சி: கடக ராசியின் பலன்கள்!

ராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rahu ketu peyarchi 2019 - ராகு கேது பெயர்ச்சி: நாகநாதசுவாமி கோயிலில் திரளும் பக்தர்கள் கூட்டம்!

rahu ketu peyarchi 2019 - ராகு கேது பெயர்ச்சி: நாகநாதசுவாமி கோயிலில் திரளும் பக்தர்கள் கூட்டம்!

கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரத்தில் நவக்கிரகங்களான ராகு பகவானிற்கு நாகநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில், சூரிய புஷ்கரணியில் நீராடி நாகநாத சுவாமியை வழிபட்டு, பின்னர் ராகுவை வழிபட்டு தோஷ பரிகாரங்களை செய்து நலம் பெறலாம். அனைத்துவித நன்மைகளையும் அருளும் சிறந்த சிவபக்த கிரகமாகிய ராகு, திருநாகேஸ்வரத்தில் மட்டுமே நாகவல்லி, நாகக்கன்னி என இரு தேவியருடன் தனிக்கோயில் கொண்டு மங்கள ராகுபகவான் ஆக அருள்பாலிக்கின்றார்.

Advertisment

ராகு-கேது பெயர்ச்சி என்றால் என்ன?

புராண வரலாற்றின்படி இத்தலத்தில் ராகு பகவான் ஸ்ரீ நாகநாத சுவாமியை வழிபட்டார் என்று கூறப்படுவதுண்டு. இந்நிலையில், ராகு பகவான் ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி நகரும் நிகழ்வுதான் ராகுபெயர்ச்சி விழா என நடத்தப்படுகிறது. அந்த வகையில் இப்போது கடக ராசியில் ராகுவும், மகர ராசியில் கேதுவும் அமர்ந்துள்ளனர். வாக்கிய பஞ்சாங்கப்படி 2019 இன்றைய தினம் ராகு பகவான் கடகத்தில் இருந்து மிதுனத்திற்கும் கேது பகவான் மகரத்தில் இருந்து தனுசு ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.

திருக்கணிதப்படி மார்ச் 6ஆம் தேதி இந்த இடப்பெயர்ச்சி நிகழ்கிறது. இந்த ராகு கேது பெயர்ச்சி மேஷம் ராசிக்கும் கொடுக்கும் பலன்களையும் அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம். ராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாடும் இல்லை என்பார்கள். யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார்.

ராகு பெயர்ச்சி விழா ராகு தலமான இக்கோவிலில் கடந்த 16ஆம் தேதி காலை முதல் கால யாக பூஜையுடன் தொடங்கி, இரண்டாம் காலம், மூன்றாம் காலம் என தொடர்ந்து காலை, மாலை நடைபெற்று இன்று நான்காம் கால யாக பூஜைகள் மஹா பூர்ணாகுதி தீபாராதனை நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து ராகு பகவானுக்கு பல்வேறு நறுமணப் பொருட்களை கொண்டு அபிஷேகம் நடந்து புனித நீரை கொண்டு மகா அபிஷேகம் நடத்தப்படும்.

ராகு பெயர்ச்சி இடம்பெயரும் நேரமான மதியம் 1.24 மணிக்கு மகா தீபாரதனை நடைபெற்றது. இதற்காக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் பெற்று வருகின்றனர். விழாவினையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடக ராசி பலன்கள்:

இது வரை ராகு கேது ஜென்ம ராசியிலும், 7ம் பாவத்திலும் சஞ்சாரம் செய்தார்கள். இப்பொழுது இடம் மாறி 12மிடத்தில் ராகுவும் 6ம் இடத்தில் கேதுவும் மாறுகிறார்கள். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் என்பதன் அடிப்படையில் இப்பொழுது கெட்ட இடத்திற்கு ராகு கேது வருவது நல்லது தான். சுபகாரியங்கள் திருமணம் சடங்கு கிரக பிரவேசம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். சிலரது பிள்ளைகளுக்கு கலப்பு திருமணம் காதல் திருமணம் அவர்கள் விருப்பபடி செய்து வைக்கும் சூழ்நிலை வரும்.

சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி என கிரகங்களின் இடப்பெயர்ச்சி அற்புதமாக இருக்கும் இந்தச் சூழ்நிலையில், ராகு கேது பெயர்ச்சியும் அருமையாக அமைந்துள்ளது. அறிவாளியை முட்டாளாக்கி உட்கார வைத்த ராகு 12 ம் இடத்தில் அமர்ந்து உள்ளதால் வெளிநாட்டுப் பயணம், தொழில் அமையும் வாய்ப்பை கொடுப்பார். வர்த்தக தொடர்பு ஏற்படும். சிலர் வீடு மாற்றம் ஊர் மாற்றம் செய்ய நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment