Rasi Palan 20th September 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 20th September Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 20th September Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 20th September 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan 20th September 2019: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 20th September 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 20th September 2019: இன்றைய ராசி பலன், செப்டம்பர் 20, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

Advertisment
Advertisements

நிதானமான போக்கை அடுத்த சில நாட்களுக்கு கடைபிடியுங்கள். கண்மூடித்தனமாக கருத்துகளை தெரிவிக்கவும் வேண்டாம். மற்றவர்கள் சார்பாக எந்த பிரச்சனைகளிலும் ஆஜராகவும் வேண்டாம். சுமாரான நாள் இன்று.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

கனவுகளை சுமந்து கொண்டு நடமாடும் ரிஷப ராசி அன்பர்களே, உங்களுக்கான நேரம் வந்துவிட்டாலும், சிறு சிறு சறுக்கல்களை சந்திப்பீர்கள். வெற்றிக்கான கதவுகள் திறந்திருந்தாலும் அங்கு நல்லெண்ணெய் ஊற்றப்பட்டிருக்கும். கவனமாக அடியெடுத்து வைக்கவும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

எல்லாமே கடினமாக சென்றுக் கொண்டிருக்கிறதா? தெரிகிறது. ஆனால், நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். நிதிநிலை உங்கள் கையை கடிக்கும். ஆனால், அதையும் மீறி குடும்பத்தை நிர்வகிக்க வேண்டியது உங்கள் கைகளில் தான் உள்ளது.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

கடினமான சூழல்களை அனுபவித்து இப்போது மெருகேற்றி காணப்படுவீர்கள். அலுவலகங்களில், குடும்பத்தில் குறை சொல்லாத அளவுக்கு நடந்து கொள்வீர்கள். வருமானம் வந்து சேரும். உடல் நலத்தில் கூடுதல் அக்கறை தேவை. முதுகு வலியால் அவஸ்தைப்படுவீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

சிறு சிறு விஷயங்களுக்காக கோபப்பட வேண்டாம். பொறுமையான நிமிடங்கள் உங்களுக்கான மதிப்பை உயர்த்தும். உங்களுக்கான வரவுகளையும் செழிப்பாக்கும். பெற்றோர்களுக்கு மதிப்பு கொடுத்தால், கிரீடம் இறங்கிவிடாது சிம்ம ராசி அன்பர்களே!.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

வெளிநாடு செல்லும் யோகம் கிட்டும். அதென்ன யோகம்? வெளிநாடு தானே... என்று நினைக்க வேண்டாம். நல்ல ஆஃபரில் உங்களுக்கான பணி அங்கு காத்திருக்கும். நிதி நிலைமை மேம்படும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

இவ்வளவு அதிகபட்ச பிரஷர் எதற்கு? நீங்களாகவே பிரச்சனைகளை தூக்கு சுமக்க வேண்டாம். எளிதாக தீர்த்துவிடக் கூடிய கணக்குகளுக்கு இவ்வளவு நேரமா எடுத்துக் கொள்வது. பாடக் கணக்குகள் அல்ல.. வாழ்க்கை கணக்கு.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

மன அழுத்தத்துடன் காணப்படுவீர்கள். குடும்பம் எவ்வளவு முக்கியம் என்பதை உணரும் நேரம் இது. ஆனால், தவறுகளை உடனுக்குடன் சரி செய்து கொள்ளும் ஆற்றல் இருப்பதால், பிழைத்துக் கொள்வீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

விரைவில் நல்ல முன்னேற்றங்களை காண்பீர்கள். ஆனால், அவசப்பட வேண்டாம். கிடைக்கும் வாய்ப்புகளை தவற விடாதீர்கள். உடல் ஆரோக்யத்தில் அக்கறை தேவை.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு உருவாகும் சூழல் உள்ளது. பண விவகாரங்களில் ஒருமுறைக்கு பல முறை யோசித்து முடிவெடுங்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். பயனுள்ள நாள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

எவ்வளவு உழைத்தாலும், உரிய பாராட்டு கிடைக்கவில்லையே என்று கவலைப்பட வேண்டாம். பாராட்டு இல்லையென்றாலும், தனிப்பட்ட உங்களின் வளர்ச்சி முன்னேற்றம் பெறும். கடவுள் வழிபாடு அவசியம்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

கற்பனையில் மிதப்பதை கொஞ்சம் நிறுத்தி வைக்கலாமே. பெண்களுடனான நட்பில் கவனம் தேவை. கடினமாக சூழலை கையாள தயாராகிக் கொள்ளுங்கள்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: